/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நாள் முழுவதும் முடங்கிய 'சர்வர்' ; பொதுமக்கள் கடும் அவதி
/
நாள் முழுவதும் முடங்கிய 'சர்வர்' ; பொதுமக்கள் கடும் அவதி
நாள் முழுவதும் முடங்கிய 'சர்வர்' ; பொதுமக்கள் கடும் அவதி
நாள் முழுவதும் முடங்கிய 'சர்வர்' ; பொதுமக்கள் கடும் அவதி
ADDED : செப் 30, 2025 01:05 AM
அவிநாசி; அவிநாசி சார்-பதிவாளர் அலுவலகத்தில்,'சர்வர்' முடங்கியதால் பத்திரம் பதிவு செய்வதில் பாதிப்பு, பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.
அவிநாசி, சேவூர் ரோட்டில் சார்-பதிவாளர் அலுவலகம் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. இதில், நாள்தோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் டோக்கன்கள் வழங்கப்பட்டு பத்திரப்பதிவு நடைபெறுகிறது. முழுவதும் கணினி மயமாக்கப்பட்ட பத்திரப்பதிவுத் துறையில் அனைத்து பணிகளும் அரசின் பத்திரப்பதிவு செயலி வாயிலாக மட்டுமே செல்லுபடி யாகும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று காலை முதலே அரசின் பத்திரப்பதிவுத்துறை சர்வர் முடங்கியதால் டோக்கன்கள் வழங்குவதிலும், பத்திரம் பதிவு செய்வதிலும் இழுபறி ஏற்பட்டது. இதன் காரணமாக காலை முதல் பத்திரம் பதிவு செய்ய வந்தவர்கள் கால்கடுக்க காத்திருந்தனர்.
நேற்று மாலை, வரையிலும் சர்வர் வேலை செய்யாததால், பத்திரப்பதிவு பணிகள் எதுவும் நடைபெறவில்லை. இதனால், இடம் கிரயம் செய்ய வந்த நுாற்றுக்கணக்கான பொதுமக்கள் கடுமையாக அவதிப்பட்டனர்.