/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தபால் அலுவலகத்தில் 'சர்வர்' பிரச்னை
/
தபால் அலுவலகத்தில் 'சர்வர்' பிரச்னை
ADDED : டிச 09, 2024 07:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம் : பல்வேறு சேவைகளை பெற வேண்டி, பல்லடம் தபால் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள், 'சர்வர்' பிரச்னை காரணமாக திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
பொதுமக்கள் கூறிய தாவது: 'சர்வர்' பிரச்னை சரியானால் தான், சேவைகளை வழங்க முடியும். எனவே, மற்றொரு நாள் வந்து பாருங்கள் என்று ஊழியர்கள் கூறுகின்றனர். பிரச்னைக்கு நிரந்தர தீர்வு தேவை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஊழியர்களிடம் கேட்டதற்கு, 'இப்பிரச்னை பல்லடத்தில் மட்டுமல்ல. அனைத்து பகுதியிலுள்ள தபால் அலுவலகங்களிலும் தான் உள்ளது. சர்வர் கோளாறு ஏற்பட்டால் நாங்கள் என்ன செய்வது? விரைவில் தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம்,' என்றனர்.