ADDED : மே 24, 2025 11:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெள்ளகோவில்: முத்துார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் எள் ஏலம் நடந்தது.
ஏலத்தில், விவசாயிகள், 17 பேர் பங்கேற்றனர். விவசாயிகள் தாங்கள் விளைவித்த, 3,571 கிலோ (49 மூட்டையில்) எள் கொண்டு வந்தனர். கிலோ 141.19 முதல், 101.66 ரூபாய் வரை ஏலம் போனது. சராசரியாக, 131.19 ரூபாய்க்கு விற்றது. மொத்தம், 3,571 கிலோ எள், 4.41 லட்சம் ரூபாய்க்கு ஏலம் நடந்ததாக ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தினர் தெரிவித்தனர்.