/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உடுமலை திருப்பதி கோவிலில் ஏழாம் ஆண்டு விழா துவக்கம்
/
உடுமலை திருப்பதி கோவிலில் ஏழாம் ஆண்டு விழா துவக்கம்
உடுமலை திருப்பதி கோவிலில் ஏழாம் ஆண்டு விழா துவக்கம்
உடுமலை திருப்பதி கோவிலில் ஏழாம் ஆண்டு விழா துவக்கம்
ADDED : ஜூன் 27, 2025 09:44 PM
உடுமலை; உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலில், கும்பாபிேஷக ஏழாம் ஆண்டு விழா, நேற்று துவங்கியது.
காலை, 7:00 மணிக்கு, ஸ்ரீ விஷ்வக்சேனர், லட்சுமி ஹயக்கிரீவர், சக்கரத்தாழ்வார், லட்சுமி நரசிம்மர், தன்வந்திரி பெருமாள், கருடாழ்வார் மற்றும் ஆஞ்சநேய பெருமாளுக்கு, பல்வேறு திரவியங்களில் திருமஞ்சனம் நடந்தது.
தொடர்ந்து, 8:30 மணிக்கு, பக்தர்கள், புற்றுக்கோவிலிருந்து பால்குடங்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின் ஸ்ரீ ரேணுகாதேவி தாயார் திருமஞ்சனம் நடந்தது. மாலை, 4:30 மணிக்கு, ஸ்ரீ பத்மாவதி தாயார், ஸ்ரீ ஆண்டாள் திருமஞ்சனம் நடந்தது.
இன்று காலை, 7:00 மணிக்கு, சிறப்பு ஹோமம், நவ கலச ஸ்தாபிதம், மூலவர் வேங்கடேசபெருமாள் மற்றும் உற்சவர் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது. பின், சிறப்பு அலங்கார பூஜை மற்றும் ஸ்ரீ தேவி பூதேவி சமேத பெருமாள் உற்சவம் புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது.