/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வீடுகளுக்குள் புகுந்த கழிவுநீர்; பொதுமக்கள் சாலை மறியல்
/
வீடுகளுக்குள் புகுந்த கழிவுநீர்; பொதுமக்கள் சாலை மறியல்
வீடுகளுக்குள் புகுந்த கழிவுநீர்; பொதுமக்கள் சாலை மறியல்
வீடுகளுக்குள் புகுந்த கழிவுநீர்; பொதுமக்கள் சாலை மறியல்
ADDED : மே 02, 2025 12:18 AM

பல்லடம்; பல்லடம், கல்லம்பாளையம் கிராமத்தில், நகராட்சி சார்பில், 12 ஆயிரம் லி., கொள்ளளவு கொண்ட கழிவுநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை, திடீரென பெய்த மழை காரணமாக, கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடியதை தொடர்ந்து, தொட்டி நிரம்பி, அருகில் உள்ள வீடுகளுக்குள் கழிவு நீர் புகுந்தது. இதனையடுத்து, ஆவேசம் அடைந்த குடியிருப்பினர், மங்கலம் ரோட்டில், சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து குடியிருப்பினர் கூறுகையில், 'இப்பகுதியில் உள்ள நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், இங்குள்ள தொட்டியில் தேக்கி வைக்கப்பட்டு, நகராட்சி கழிவு நீர் அகற்றும் வாகனம் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது.
முந்தைய நாட்களில், கழிவுநீர் ஓடை வழியாக செல்லும் வகையில் இருந்தது. கழிவுநீர் தொட்டி அமைத்ததை தொடர்ந்து, ஒவ்வொரு முறை தொட்டில் நிறையும் போதும், தாழ்வான பகுதியில் கழிவுநீர் வழிந்தோடி, குடியிருப்புகளுக்குள் புகுந்து விடுகிறது.
இவ்வாறு, இன்றும் கழிவுநீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. குழந்தைகளை வைத்துக்கொண்டு நாங்கள் எவ்வாறு இங்கு வசிப்பது? பழைய முறைப்படி கழிவு நீரை ஓடை வழியாக கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் நகராட்சி கமிஷனர் மனோகரன், உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர்.