/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரோட்டில் கழிவுநீர்; பொதுமக்கள் அவதி
/
ரோட்டில் கழிவுநீர்; பொதுமக்கள் அவதி
ADDED : ஜூலை 14, 2025 12:56 AM

பொங்கலுார்; கொடுவாயில் கழிவுநீர் பிரச்னையை தீர்ப்பதற்காக, 25 லட்சம் ரூபாய் செலவில் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டுள்ளது.
ஊரிலிருந்து வெளியேறும் கழிவு நீர் கடைக்கோடியில் பூமிக்குள் இறங்கும் வகையில் கசிவு நீர் குழிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இவற்றை சரிவர பராமரிப்பது இல்லை. கால்வாயில் ஏராளமான குப்பைகள் குவிந்து கிடக்கிறது.
தண்ணீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. மேலும் கழிவு நீர் பூமிக்குள் செல்லும் பகுதியில் குப்பைகள் குவிந்து கிடப்பதால் கழிவு நீர் பூமிக்குள் செல்லாமல் நடுரோட்டில் செல்கிறது.
இதனால் அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள், கடைக்காரர்கள், சிறு வணிகர்கள், ரோட்டில் செல்லும் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகின்றனர். மக்கள் நலப்பணிக்காக செலவு செய்தால் மட்டும் போதாது. அதை தொடர்ந்து பராமரிக்க வேண்டும்.