ADDED : செப் 23, 2024 12:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர் - தாராபுரம் ரோடு, புதுார் பிரிவு பஸ் ஸ்டாப் அருகே மிகப்பெரிய வாகை ரக மரம் உள்ளது. பசுமைக்கு சான்றாக மட்டுமின்றி, கிளைகள் பரப்பி பெரிய அளவில் நின்றிருந்த மரம், பஸ் பயணிகளுக்கும் இயற்கை நிழற்குடையாக பலனளித்துவந்தது.
கேட்க யாருமில்லை என்ற தைரியத்தில், எவ்வித அனுமதியும் பெறாமல், நேற்று பட்டப்பகலில் இந்த மரத்தின் கிளைகள் அனைத்தையும் தனியார் வெட்டி வீழ்த்திவிட்டனர்.
தற்போது, மரம் கிளைகளின்றி, மொட்டையாக நிற்கிறது. மரத்தை வெட்டியவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது இயற்கை ஆர்வலர்களின் கோரிக்கை.