/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நாய் கடித்து ஆடுகள் பலி: இழப்பீடு வழங்க தாமதம்
/
நாய் கடித்து ஆடுகள் பலி: இழப்பீடு வழங்க தாமதம்
ADDED : அக் 03, 2025 10:48 PM
திருப்பூர்:
வெள்ளகோவில் கிளை கால்வாய் நீர் பாதுகாப்பு சங்க தலைவர் வேலுசாமி கூறியதாவது:
காங்கயம் பகுதியில் வெறி நாய் கடிக்கு ஆடுகள் பலியாவது தொடர்கிறது. அரசு தரப்பில், பெரிய ஆடு இறந்தாலும், குட்டி இறந்தாலும், ஒரு ஆட்டுக்கு ஆறாயிரம் ரூபாய் மட்டுமே இழப்பீடாக வழங்கப்படுகிறது.
அதாவது, சந்தை மதிப்பில் பாதி தொகையே வழங்கப்படுகிறது. அதனையும் உடனடியாக வழங்குவதில்லை.
கடந்த 2024, அக்., முதல் நடப்பாண்டு மார்ச் வரை பலியான ஆடுகளுக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. ஏப்., முதல் கடந்த மாதம், வரை, பலியான, 1,250 ஆடுகளுக்கு உரிய 75 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்காமல் இழுத்தடிக்கின்றனர்.
கால்நடைகளை இழந்த விவசாயிகளுக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. தற்போது, பரஞ்சேர்வழியில், ஒரே நாளில், 15 ஆடுகளை வெறிநாய் கடித்து குதறியுள்ளது; ஒன்பது ஆடுகள் பலியாகியுள்ளன. இதுதொடர்பாக அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது. ஆடுகளை பிரேத பரிசோதனைக்கு வழங்க மறுத்து போராட்டத்தை தொடர்கிறோம்.
நிலுவையில் உள்ள இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்கவேண்டும். இல்லாவிடில், அடுத்தகட்ட போராட்டங்கள் நடத்தப்படும். தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவது, வெறிநாய்களை அப்புறப்படுத்துவதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை உள்ளாட்சி அமைப்புகளும், மாவட்ட நிர்வாகமும் மேற்கொள்ளவேண்டும்.