/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நாய்களால் பலியான ஆடுகள்; தாராபுரம், காங்கயத்தில் அதிகம்
/
நாய்களால் பலியான ஆடுகள்; தாராபுரம், காங்கயத்தில் அதிகம்
நாய்களால் பலியான ஆடுகள்; தாராபுரம், காங்கயத்தில் அதிகம்
நாய்களால் பலியான ஆடுகள்; தாராபுரம், காங்கயத்தில் அதிகம்
ADDED : அக் 09, 2025 12:24 AM
திருப்பூர்;, 'திருப்பூர் மாவட்டத்தில், 17 மாதங்களில் தெரு நாய்கள் கடித்து பலியான, 826 ஆடுகளில், காங்கயம், தாராபுரம் தாலுகாக்களில் மட்டும், 638 ஆடுகள் பலியாகியுள்ளன'' என, வருவாய்த்துறையினரின் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், கடந்த இரு ஆண்டுகளாக, தெரு நாய்கள் கடித்து ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகள் பலியாவது தொடர்கிறது.
மாவட்ட நிர்வாகம் எடுத்த கணக்கெடுப்பு படி, 2024, ஜன., முதல், அக்., வரையும்; 2025 மார்ச் முதல், செப்., வரையிலான, 17 மாதங்களில், தெரு நாய்கள் கடித்து இறந்த ஆடுகளின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
அதன்படி, மாவட்டம் முழுக்க, 632 வெள்ளாடுகள், 194 செம்மறியாடுகள், 566 கோழிகள் தெரு நாய்களால் கடிப்பட்டு இறந்துள்ளன. இதில், அதிகபட்ச பாதிப்பாக, தாராபுரம் தாலுகாவில், 136 வெள்ளாடுகள், 41 செம்மறியாடுகள், 196 கோழிகள் பலியாகியுள்ளன. காங்கயம் தாலுகாவில், 410 வெள்ளாடுகள், 51 செம்மறியாடுகள், 333 கோழிகள் பலியாகியுள்ளன.
இப்பகுதிகளில் தெரு நாய்களை கட்டுப்படுத்த உள்ளாட்சி நிர்வாகங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.