/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'நடந்தாய் வாழிக்காவிரி' திட்டத்தில் பவானி, அமராவதி, நொய்யல் ஆறுகள்
/
'நடந்தாய் வாழிக்காவிரி' திட்டத்தில் பவானி, அமராவதி, நொய்யல் ஆறுகள்
'நடந்தாய் வாழிக்காவிரி' திட்டத்தில் பவானி, அமராவதி, நொய்யல் ஆறுகள்
'நடந்தாய் வாழிக்காவிரி' திட்டத்தில் பவானி, அமராவதி, நொய்யல் ஆறுகள்
ADDED : அக் 09, 2025 12:11 AM
திருப்பூர்; 'நடந்தாய் வாழிக்காவிரி' திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து, துறை சார்ந்த அலுவலர் களுடனான ஆய்வுக்கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
கலெக்டர் மனீஷ் நாரணவரே, முன்னிலை வகித்தார். அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி தலைமை வகித்தனர்.
அமைச்சர் சாமிநாதன் கூறியதாவது:
நடந்தாய் வாழிக்காவிரி திட்டத்தின் முக்கிய நோக்கம், காவிரி நதி மற்றும் அதன், 5 துணை நதிகளான திருமணிமுத்தாறு, சரபங்கா, பவானி, அமராவதி மற்றும் நொய்யல் ஆகியவற்றை பாதுகாத்து, புதுப்பித்து, கழிவுநீர் கலக்காத ஆறாக மாற்றுவது தான்.
இத்திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தற்போது நடந்து வருகிறது.
இத்திட்டத்தை இரண்டு கட்டமாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. திட்டப்பணிகளில், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் ஒருங்கிணைத்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.
ஆய்வுக்கூட்டத்தில், திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் அமித், மாவட்ட வருவாய் அலுவலர் கார்த்திகேயன், மாவட்ட வன அலுவலர் ராஜேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைதிட்ட இயக்குனர் சங்கமித்திரை உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.