/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆதரவற்ற முதியவர் மையத்தில் அடைக்கலம்
/
ஆதரவற்ற முதியவர் மையத்தில் அடைக்கலம்
ADDED : ஜூலை 29, 2025 11:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; திருப்பூர் அரசு மருத்துவமனையில், வாகன விபத்தில் காயமடைந்த மருதையன், 90 என்பவர் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
திருப்பூரில் பல ஆண்டு முன்னர் இறைச்சி கடை நடத்தி வந்த அவர் வயது மூப்பு காரணமாக வேலை செய்ய முடியாமல் போனது. மேலும், விபத்தில் காயமடைந்த நிலையில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளையினரை அவர் அணுகி, தன்னை ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்க வேண்டுகோள் விடுத்தார்.
அறக்கட்டளையினர் தகவலின் பேரில் அவிநாசி அருகே போத்தம்பாளையத்தில் செயல்படும் நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை நிர்வாகிகள், அவரை மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர்.