/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஜொலிக்கும் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில்! அறங்காவலர் குழு தலைவர் பெருமிதம்
/
ஜொலிக்கும் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில்! அறங்காவலர் குழு தலைவர் பெருமிதம்
ஜொலிக்கும் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில்! அறங்காவலர் குழு தலைவர் பெருமிதம்
ஜொலிக்கும் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில்! அறங்காவலர் குழு தலைவர் பெருமிதம்
ADDED : ஜன 29, 2024 11:45 PM

அவிநாசி;'ஆகமவிதிப்படி, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் திருப்பணிகள் நடந்துள்ளன' என்று அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல் கூறினார்.
கோவிலில், மஹா கும்பாபிேஷகம் வரும் 2ம் தேதி நடக்கிறது. திருப்பணி மற்றும் விழா ஏற்பாடுகள் குறித்து அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல் கூறியதாவது:
கோவிலில், அனைத்து திருப்பணிகளும் ஆகம விதிகள் படி அமைக்கப்பட்டுள்ளது. சிவாச்சாரியார்கள் முன்னிலையில் அனைத்து திருப்பணிகளும் அறநிலைய துறையின் ஆலோசனையின் படி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோவில் இரண்டாம் பிரகாரத்தில் திருமாளிகை பத்தி மண்டபம் சென்னை சில்க்ஸ் நிறுவனத்தினர் அமைத்து கொடுத்துள்ளனர்.
இன்று மாலை (நேற்று) முதல் கால யாக பூஜை துவங்கியுள்ளது. தினந்தோறும் காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை யாகசாலை பூஜைகள் நடைபெறும்.
அனைத்து சன்னதி கதவுகள் அனைத்தும் திருப்பணிகள் செய்யப்பட்டு பாலீஷ் போடப்பட்டுள்ளது. சன்னதி கதவுகளுக்கு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மூலம் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பக்தர்கள் கதவுகள் மூடப்பட்டிருந்தாலும் சுவாமி தரிசனம் செய்யலாம்.
சோலார் மின் வசதி
புதிய நவீன தொழில்நுட்ப வசதியுடன் டக்ட் முறையில் ஒயரிங் ஆணி அடிக்காமல் கோவில் முழுவதும் பதிக்கப்பட்டுள்ளது. கூடுதல் வசதிக்காக பல இடங்களில் புதிய அதிக ஒளி தரும் விளக்குகள் போடப்பட்டுள்ளது.
கொடி மரத்தில் பதிப்பதற்காக எலக்ட்ரோ பிளேட் மற்றும் தங்க தகடுகள் கும்பகோணத்தில் செய்யப்பட்டு வரும் 31ம் தேதி இணை ஆணையர் முன்பு பொருத்தப்பட உள்ளது. கோவில் கும்பாபிஷேகம் முடிந்த பின் கோவிலில் உபயோகப்படுத்தும் மின் சாதனங்களுக்காக சோலார் மின் வசதி ஏற்படுத்தப்படும்.
அரச மரத்துப் பிள்ளையார் பீடம் அமைக்கப்பட்டு பணிகள் முடிவுற்றது. சிலை வைப்பதற்காக அனுமதி கோரப்பட்டுள்ளது. 'கஸ்' கிளாத்திங் நிறுவனத்தினர், கோசாலையை நிர்வகிக்கின்றனர்.
இவ்வாறு, சக்திவேல் கூறினார்.
பார்வைக்கு கல்வெட்டு
செயல் அலுவலர் பெரிய மருது பாண்டியன் கூறுகையில், ''1909, 2003ல் மத்திய மற்றும் மாநில தொல்பொருள் ஆராய்ச்சி மூலம் ஆய்வு செய்துள்ளனர். தற்போது அம்மன் சன்னதி சுற்றிலும் நீராழி பத்தி எனப்படும் அம்மன் சன்னதி அடிப்பகுதியில் உள்ள கல்வெட்டுகள் தெரியும்படி அமைக்கப்பட்டுள்ளது.
பழமை மாறாமல் கல்வெட்டுகள் பக்தர்களின் பார்வையில் படும்படி செய்யப்பட்டுள்ளது. காசி கிணற்று நீர் பார்க்கும் படியும், கிணற்றில் மழை நீர் உள்ளே விழும்படியும் மேல் பகுதியில் கனமான கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. சுவாமிகளுக்கு செய்யப்படும் தீர்த்த நீர் முழுவதும் கோவிலில் இருந்து வெளியேறும் அமைப்பில் அனைத்து சன்னதியில் இருந்தும் வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.
காசி விஸ்வநாதர்கோவிலில்...
அறங்காவலர் பொன்னுசாமி கூறுகையில், ''63 நாயன்மார் பீடம் முழுவதும் அகற்றி புதியதாக அமைக்கப்பட்டுள்ளது. அபிஷேக தண்ணீர் பக்தர்கள் காலில் மிதிபடாமல் வெளியேறும்படி சிறிய கால்வாய் வெட்டி அதன் மேல் தகடுகள் அமைக்கப்பட்டுள்ளது. 39 கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. நாராசா வீதியிலுள்ள காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம், வரும் 1ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும்,'' என்றார்.