/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிவன்மலை தைப்பூச விழா: தேர் நிலை அடைந்தது
/
சிவன்மலை தைப்பூச விழா: தேர் நிலை அடைந்தது
ADDED : ஜன 29, 2024 12:12 AM

திருப்பூர்:சிவன்மலையில் பிரசித்தி பெற்ற சுப்ரமணியசுவாமி கோவில் உள்ளது. இந்தாண்டு தைப்பூச தேர்த்திருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடக்கிறது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் 26ம் தேதி துவங்கி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மாலை தேர்வடம் பிடிக்கப்பட்டு பக்தர்களால் இழுக்கப்பட்டு தெற்கு வீதியில் நிலை நிறுத்தப்பட்டது.
இரண்டாவது நாளான நேற்று முன்தினம் மாலை, பக்தர்களால் தேர் இழுக்கப்பட்டது. தேர் மலையை சுற்றி வந்து கோசமலை பகுதியில் நிறுத்தப்பட்டது.
மூன்றாவது நாளான நேற்று மீண்டும் தேர் வடம் பிடிக்கப்பட்டது. ஏராளமான மக்கள் பங்கேற்று 'அரோகரா' கோஷம் எழுப்பியபடி தேரை இழுத்தனர். மாலை, 6:15 மணிக்கு தேர் நிலை அடைந்தது. இன்று காலை, கால்சந்தி மற்றும் பல்வேறு சமுதாய மக்களின் மண்டப அறக்கட்டளை நடக்கிறது.