/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீசத்ய சாய் மந்திரில் சிவராத்திரி விழா
/
ஸ்ரீசத்ய சாய் மந்திரில் சிவராத்திரி விழா
ADDED : பிப் 16, 2026 05:49 AM

திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீசத்ய சாய் மந்திரில் சிவராத்திரி விழா, சிறப்பு பஜன் நிகழ்வுடன் நடைபெற்றது.
திருப்பூர் பி.என். ரோட்டில் உள்ள ஸ்ரீசத்ய சாய்மந்திரில் ஆண்டுதோறும் சிவராத்திரி விழா உற்சாகத்துடன் கொண்டாடப்படுவது வழக்கம். அவ்வகையில், நடப்பாண்டு சிவராத்திரி விழா நிகழ்ச்சி நேற்று பரவசமாக நடைபெற்றது.
சத்ய சாய் விஹார் வளாகத்தில் சிவலிங்கம் அலங்கரித்து வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. முன்னதாக பக்தர்கள் வேத பாராயணம் நடத்தினர். தொடர்ந்து பல்வேறு சமிதிகளிலிருந்தும் வந்த பக்தர்கள் குழுக்களாக சிறப்பு பஜன் நடத்தினர். காந்தி நகர், முத்துநகர், பல்லடம் ரோடு, சாய் இளைஞர்கள், சேரன் நகர், ராயபுரம், இடுவாய் மற்றும் ராம்நகர் மண்டல் பக்தர்கள் இதில் பங்கேற்றனர். நேற்று மாலை துவங்கிய சிறப்பு பஜன் நிகழ்வு விடிய விடிய நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

