/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பை கொட்ட எதிர்ப்பு; நாளை கடையடைப்பு
/
குப்பை கொட்ட எதிர்ப்பு; நாளை கடையடைப்பு
ADDED : ஜூன் 30, 2025 12:31 AM
அனுப்பர்பாளையம்; நெருப்பெரிச்சல் ஜி.என்., கார்டன் பத்திரப்பதிவு அலுவலகம் அருகில் உள்ள பாறைக்குழியில், திருப்பூர் மாநகரில் சேகரமாகும் குப்பைகள் கொட்டப்படுகின்றன.
இதற்கு அனைத்து கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து கடந்த வாரம் ஜி.என்., கார்டன் பஸ் ஸ்டாப் அருகில் கருப்பு கொடியேந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது அங்கு போலீஸ் பாதுகாப்புடன் குப்பை கொட்டப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் அனைத்து கட்சியினர், பொதுமக்கள் மற்றும் தமிழ்நாடு பத்திரம் மற்றும் நகல் எழுதுவோர் சங்கத்தினர் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நெருப்பெரிச்சலில் நடந்தது.
குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து, ஜூன் 1 முதல், நெருப்பெரிச்சல் ஜி.என்., கார்டன் பகுதியில் கடையடைப்பு நடத்துவது; குப்பை கொட்ட வரும் லாரியை சிறை பிடித்து போராட்டம் நடத்துவது என முடிவு செய்துள்ளனர்.