/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குறுமைய தடகளப் போட்டி; விகாஸ் வித்யாலயா அபாரம்
/
குறுமைய தடகளப் போட்டி; விகாஸ் வித்யாலயா அபாரம்
ADDED : ஆக 20, 2025 10:16 PM

திருப்பூர்; மாவட்ட விளையாட்டு மைதானத்தில் திருப்பூர் தெற்கு குறுமைய தடகளப்போட்டிகள் நடந்தன. இதில் பல்வேறு வெற்றிகளை, திருப்பூர் விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் பெற்றுள்ளனர்.
ஈட்டி எறிதலில் 17 வயது, மாணவியர் பிரிவில் மித்ரா முதலிடம்; மாணவர் பிரிவில் விஷாந்த் மூன்றாம் இடம்; 17 வயது, 100 மீட்டர் ஓட்டம் மற்றும் நீளம் தாண்டுதலில் கிருத்திக் மூன்றாமிடம்; 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் மது அஷ்வின், கிருத்திக், விஷாந்த்ராஜ், நிஜின் கிேஷார் ஆகியோர் மூன்றாம் இடம்; 1,600 மீட்டர் தொடர் ஓட்டத்தில் சர்பேஷ்குமார், மது அஷ்வின், ரிஷிகேஷ் நாயர், நிஜின் கிேஷார் ஆகியோர் மூன்றாம் இடம் பிடித்தனர்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்; பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் ரமேஷ், கதிர்வேல், பாக்கியராஜ் ஆகியோருக்கு பள்ளி தாளாளர் ஆண்டவர் ராமசாமி பாராட்டு தெரிவித்து சான்றிதழ்களை வழங்கினார்.
பொருளாளர் ராதா, செயலாளர் ராமசாமி மாதேஸ்வரன், துணைச்செயலாளர் சிவப்பிரியா மாதேஸ்வரன், பள்ளி முதல்வர் அனிதா உள்ளிட் டோர் பங்கேற்றனர்.