/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குறுமைய அளவிலான இறகு பந்து போட்டி
/
குறுமைய அளவிலான இறகு பந்து போட்டி
ADDED : ஜூலை 27, 2025 09:01 PM

உடுமலை; உடுமலை குறுமைய அளவிலான, பள்ளி மாணவர்களுக்கான இறகுப்பந்து போட்டி நடந்தது.
உடுமலை குறுமைய அளவில், பள்ளி மாணவியருக்கான இறகுப்பந்து போட்டி, உடுமலை வேலவன் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் நடந்தது.
இரட்டையர் ஆட்டத்தில், 14 வயதினருக்கான பிரிவில், உடுமலை ஆர்.ஜி.எம்., பள்ளி முதலிடத்திலும், விசாலாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடத்திலும் வெற்றி பெற்றன.
தொடர்ந்து, சீனியர் மற்றும் சூப்பர் சீனியர் பிரிவுகளில், சீனிவாசா மெட்ரிக் பள்ளி முதலிடம் பெற்றது. சீனியர் பிரிவில், விசாலாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடமும், சூப்பர் சீனியர் பிரிவில், லுார்துமாதா மெட்ரிக் பள்ளி இரண்டாமிடமும் பெற்றன.
ஒற்றையர் ஆட்டத்தில், ஜூனியர் பிரிவில், உடுமலை ஆர்.ஜி.எம்., பள்ளி முதலிடத்திலும் எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடத்திலும் வெற்றி பெற்றன. சீனியர் மற்றும் சூப்பர் சீனியர் பிரிவில், சீனிவாசா மெட்ரிக் பள்ளி முதலிடத்தில் வெற்றி பெற்றது.
சீனியர் பிரிவில், ஆர்.கே.ஆர்., கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடமும், சூப்பர் சீனியர் பிரிவில், உடுமலை லுார்துமாதா மெட்ரிக் பள்ளி இரண்டாமிடமும் பெற்றன.