ADDED : ஜூலை 21, 2025 09:50 PM

உடுமலை; உடுமலை குறுமைய அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டியில் பூளவாடி அரசு மேல்நிலைப்பள்ளி அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்றது.
உடுமலை குறுமைய அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி ஏரிப்பாளையத்தில் நடந்தது. சோமவாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்(பொ) ஆலிஸ்திலகவதி, ஓய்வுபெற்ற உடற்கல்வி ஆசிரியர் பாரூக் போட்டிகளை துவக்கி வைத்தனர். ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் பிரிவுகளில் மொத்தமாக 60 அணிகள் பங்கேற்றன.
மாணவர்களுக்கான போட்டி: ஜூனியர் பிரிவு ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டியில், பூளவாடி அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடமும், சீனியர்களுக்கான பிரிவில் இரு ஆட்டங்களிலும் உடுமலை எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளி முதலிடம் பெற்றது.
சூப்பர் சீனியர்களுக்கான பிரிவில் ஒற்றையர் ஆட்டத்தில் சீனிவாசா மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி முதலிடமும், இரட்டையர் ஆட்டத்தில் மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடத்திலும் வெற்றி பெற்றன.
மாணவியருக்கான, ஜூனியர் பிரிவில் ஒற்றையர் ஆட்டத்தில் எஸ்.கே.பி., பள்ளியும், இரட்டையர் போட்டியில் பூளவாடி அரசு மேல்நிலைப்பள்ளியும் வெற்றி பெற்றன. சீனியர் மற்றும் சூப்பர் சீனியர்களுக்கான பிரிவில் இரு ஆட்டங்களிலும் பூளவாடி அரசு மேல்நிலைப்பள்ளி வெற்றி பெற்றது.