ADDED : பிப் 14, 2025 04:05 AM
திருப்பூர்; பனிப்பொழிவு காரணமாக திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு உழவர் சந்தை, தென்னம்பாளையம் காய்கறி மார்க்கெட்டுக்கான கறிவேப்பிலை வரத்து குறைந்துள்ளது.
இலைப்புள்ளி தாக்குதலால் ஏற்கனவே வரத்து சரிந்த நிலையில், பனிப்பொழிவால், செடிகளில் இலை உதிர்வது அதிகரித்துள்ளது. தெற்கு உழவர் சந்தைக்கு, 70 முதல், 150 கிலோ விற்பனைக்கு வரும் நிலையில், கடந்த பத்து நாட்களாக, 100 கிலோவுக்கு குறைவாகவே வருகிறது. இதனால், கிலோ, 30 ரூபாய் விற்ற கறிவேப்பிலை, 20 ரூபாய் உயர்ந்து கிலோ, 50 ரூபாயாகியுள்ளது. ஒரு கட்டு, பத்து ரூபாய் இருந்த நிலை மாறி, 20 முதல், 25 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது.
இதனால், மளிகை கடைகளில் சில்லறை் விற்பனை இல்லாமல், பத்து ரூபாய்க்கு மட்டும் கறிவேப்பிலை விற்கப்படுகிறது. பனி குறைந்து, வரத்து உயர்ந்தால் தான் கறிவேப்பிலை விலை குறையும் என்கின்றனர், விவசாயிகள்.

