/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீ ஷிவ் வித்யா மந்திர் பள்ளி துவக்க விழா
/
ஸ்ரீ ஷிவ் வித்யா மந்திர் பள்ளி துவக்க விழா
ADDED : ஏப் 12, 2025 11:24 PM

திருப்பூர்: திருப்பூர், பி.என்., ரோடு, அண்ணா நகர், வடக்கு பகுதியில்,'ஸ்ரீ ஷிவ் வித்யா மந்திர்' என்ற புதிய சி.பி.எஸ்.இ., பள்ளி துவக்க விழா நேற்று நடந்தது.
பள்ளி தலைவர் சென்னியப்பன் வரவேற்றார். எம்.பி., சுப்பராயன் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., செல்வராஜ், மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தனர்.
மாநகராட்சி முதலாம் மண்டலக்குழு தலைவர் உமா மகேஸ்வரி, கவுன்சிலர் ரவிச்சந்திரன், தமிழ்நாடு ஸ்பின்னிங் மில் அசோசியேஷன் சங்க தலைவர் 'சோழா' அப்புக்குட்டி உட்பட பலர் பங்கேற்று பேசினர்.
சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பள்ளி அறங்காவலர் சிவகாமி சென்னியப்பன், இயக்குனர்கள் மதுபாலாஜி, பூர்வ வர்ஷினி மது பாலாஜி, ஷர்மிளா, நிவேதிதா உள்ளிட்டோர் குத்து விளக்கேற்றி வைத்து துவங்கி வைத்தனர்.பள்ளி முதல்வர் அனில்குமார் நன்றி கூறினார்.
பள்ளி தலைவர் சென்னியப்பன் மற்றும் நிர்வாகிகள் கூறியதாவது:
திருப்பூரில் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ள இப்பள்ளியில், இந்திய அளவில் சிறப்பான கல்வி முறையில் கற்பிக்கப்படும். நடப்பு கல்வியாண்டில் பிரி கே.ஜி., முதல் 8ம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் சேர்க்கை நடக்கிறது.
ஏ.ஐ., தொழில்நுட்ப உதவியுடன் மாணவர்களுக்கு கற்பிக்கப்படும். வேறு எந்த பள்ளியிலும் இல்லாத வகையில், பெற்றோர்களுக்கும் டிஜிட்டல், ஏ.ஐ., பயன்பாடு மற்றும் ஆங்கிலம் கற்றுத்தரப்படும்.
அனைத்து வகுப்பறைகளும் முற்றிலும் ஸ்மார்ட் வகுப்பறைகள். அர்ப்பணிப்பு உணர்வும், சிறந்த பயிற்சியும் பெற்ற திறமையான ஆசிரியர்கள், அனைத்து வசதிகளுடன் கூடிய லேப்; விளையாட்டு உள்ளிட்ட திறன் வளர்ப்புக்கு சிறப்பு பயிற்சி, வாகன வசதி ஆகியன உள்ளன.
கூடுதல் பயிற்சியாக ஸ்கேட்டிங், டேக்வாண்டோ, சிலம்பம், கராத்தே, யோகா, இசை மற்றும் நடனப் பயிற்சி உண்டு. அட்மிஷன் உள் ளிட்ட விவரங்களுக்கு 96777 76505 மற்றும் 96777 95000 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

