/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிட்ஸ் கிளப் பள்ளியில் சகோதயா போட்டிகள்
/
கிட்ஸ் கிளப் பள்ளியில் சகோதயா போட்டிகள்
ADDED : ஜூலை 18, 2025 11:37 PM

திருப்பூர்; மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான சகோதயா எறிபந்து போட்டி, திருப்பூர், கிட்ஸ் கிளப் சி.பி.எஸ்.இ., முதுநிலை பள்ளியில் நடந்தது.
திருப்பூர், கோவை, ஈரோடு என பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், 30க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த, 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். கிட்ஸ் கிளப் பள்ளி குழு தலைவர் மோகன் கார்த்திக் வரவேற்றார்.
தலைமை விருந்தினர்களாக, ஈஷா குழுமத்தின் நிர்வாக இயக்குனர் சாதிக் அலி, திருப்பூர் எறிபந்து விளையாட்டு சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.
பள்ளியின் மூத்த முதல்வர் நிவேதிகா, விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார். இதில், 12, 14, 16 மற்றும், 19 வயதுக்குட்பட்டோர் என, 4 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.