/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சித்தி விநாயகர் கோவில் ஆண்டு விழா; திரளான பக்தர்கள் பங்கேற்பு
/
சித்தி விநாயகர் கோவில் ஆண்டு விழா; திரளான பக்தர்கள் பங்கேற்பு
சித்தி விநாயகர் கோவில் ஆண்டு விழா; திரளான பக்தர்கள் பங்கேற்பு
சித்தி விநாயகர் கோவில் ஆண்டு விழா; திரளான பக்தர்கள் பங்கேற்பு
ADDED : ஜூலை 02, 2025 09:50 PM

உடுமலை; உடுமலை ருத்ரப்ப நகர் வலம்புரி சித்தி விநாயகர் கோவிலில், ஆண்டுவிழா நடந்தது.
உடுமலை ருத்ரப்ப நகர் வலம்புரி சித்தி விநாயகர், விசாலாட்சி சமேத பஞ்சமுக லிங்கேஸ்வரர், ரேணுகாதேவி, குழந்தை வேலாயுத சுப்ரமணியர் கோவில் கும்பாபிேஷக முதலாமாண்டு விழா நேற்று நடந்தது.
விழாவையொட்டி நேற்று முன்தினம் சிறப்பு பூஜைகள் துவங்கியது. கணபதி ேஹாமம், லட்சுமி ேஹாமம், வாஸ்து சாந்தி பூஜைகளும் நடந்தது.
தொடர்ந்து மாலையில் ஆனி உத்திரத்தையொட்டி சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜ மூர்த்திக்கு சிறப்பு அபிேஷகத்துடன் அலங்கார பூஜை நடந்தது.
நேற்று அதிகாலையில், வள்ளிதேவசேனா சமேத செல்வ முத்துகுமாரசுவாமி திருத்தேர், நந்தி வாகனம், மூஷிக வாகனம் பஞ்சலோக உற்சவர் விக்ரகங்களான வலம்புரி சித்தி விநாயகர், ரேணுகாதேவி சுவாமி, வீரபாகு, அஸ்திர தேவர் கும்பாபிேஷக விழா நடந்தது.
காலை, 7:00 மணிக்கு புதிய திருத்தேர் வெள்ளோட்டம் நடந்தது. சுவாமிகளுக்கு ஆண்டுவிழா சிறப்பு அபிேஷக தீபாராதனைகளும் நடந்தன.
மாலையில் சுவாமிகளின் திருவீதி உலா நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர்.