/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நால் ரோட்டில் செயல்படாத சிக்னல்
/
நால் ரோட்டில் செயல்படாத சிக்னல்
ADDED : ஜூலை 12, 2025 12:49 AM

பல்லடம்; பல்லடம் அடுத்த, காரணம்பேட்டையில், கோவை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன், பொள்ளாச்சி -- மைசூர் செல்லும் மாநில நெடுஞ்சாலை இணைகிறது.
இப்பகுதியிலுள்ள நால்ரோட்டில், பல்லடத்துக்கு இணையாக வாகன போக்குவரத்து நெரிசல் உள்ளது. சுற்றுவட்டாரப் பகுதியில் கல்குவாரி கிரஷர் நிறுவனங்களும் அதிகம் உள்ளதால், ஏராளமான டிப்பர் லாரிகளும் இவ்வழியாகவே செல்கின்றன. இவ்வாறு, போக்குவரத்து அதிகம் உள்ள இப்பகுதியில், சிக்னல் சரிவர செயல்படுவதில்லை. அடிக்கடி சிக்னல் பழுதாவதும், வாகனங்கள் தாறுமாறாக செல்வதும் வாடிக்கையாக உள்ளது.
அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:
காரணம்பேட்டை நால்ரோடு சிக்னல் அடிக்கடி பழுதாகிறது. இவ்வாறு, கடந்த சில தினங்களாக சிக்னல் செயல்படுவதில்லை. ஏற்கனவே, இப்பகுதியில் அதிகப்படியான விபத்துக்கள் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. சிக்னல் பழுதாகும்போதெல்லாம், போலீசார் முழு நேரமும் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் பணியில் ஈடுபட வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இது சாத்தியம் இல்லாதது. சிக்னல் சரிவர இயங்காததால், வாகனங்கள் தாறுமாறாக ரோட்டை கடக்கின்றன. இது ஆபத்தான பயணமாக உள்ளது. எனவே, சிக்னலை சீரமைக்க போலீசார் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.