/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உடலுக்கும் மனத்துக்கும் உகந்தது சிலம்பம்
/
உடலுக்கும் மனத்துக்கும் உகந்தது சிலம்பம்
ADDED : நவ 22, 2025 06:35 AM

க டந்த, 2014ம் ஆண்டு முதல் சிலம்பத்தின் முக்கியத்துவம் கருதி, உலக சிலம்ப சங்கத்தால் உலக சிலம்ப தினம் (நவ. 22ம் தேதி) கொண்டாடப்படுகிறது.
சிலம்பம் பயிற்சி குறித்து ஜிகினா சிலம்பம் அகாடமியை சேர்ந்த கொடியரசன் கூறியதாவது:
சிலம்பம், நம் பாரம்பரிய கலைகளில் ஒன்று. கராத்தே, டேக்வாண்டோ போன்ற கலைகள் சிலம்பத்திலிருந்து வந்தவையே. நம் மூளையில் வலம், இடம் என இரு பிரிவுகள் இருக்கும்.
சிலம்பம் சுற்றும்போது இரண்டும் செயல்படும். உடல் இயக்கம், மூளை இரண்டும் சார்ந்தது, உடலுக்கும் மனத்திற்கும் சிறந்த கலை. மாணவர்களுக்கு படிப்பதற்கும் சிந்தனை செய்வதற்கும் உதவும். சுவாச நோயை குணப்படுத்த வல்லது. என்னிடம் 'வீசிங்' இருக்கும் மாணவர் ஒருவர் சிலம்பம் கற்றார். இப்போது அவருக்கு அது இல்லாமல் போனது.
நெடுங்கம்பு, நடுக்கம்பு, இரட்டைக்கம்பு, மான்கொம்பு, வாள்வீச்சு, வாள் கேடையம் உட்பட 18 வகையான சிலம்பம் இருக்கிறது. சிலம்பம், இன்று இந்தியாவில் பல மாநிலங்களிலும், உலகில் பல இடங்களிலும் பரவியுள்ளது. நாளுக்கு நாள் சிலம்பம் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் அதிகரித்து வருகிறது.
ஆதி காலத்தில் கம்பு எடுத்து விலங்குகளை தாக்கியது முதல் இன்று வரை ஒரு தற்காப்பு கலையாக சிலம்பம் வளர்ந்துள்ளது. சிலம்பம் பயின்ற பெண் ஒருவர், தன்னை தாக்க வந்த சிலரிடம் கம்பால் அடித்து தற்காத்துக்கொண்டார்.
தமிழக அரசு, பெண்கள் பாதுகாப்பை மேம்படுத்த பள்ளி மாணவியருக்கு மூன்று மாதங்கள் தற்காப்புப் பயிற்சி பயிற்றுவிக்க அறிவுறுத்தியது. அதில் சிலம்பமும் இருக்கிறது. சிலம்பமும் ஒரு விளையாட்டு தான். அரசு வேலைகளில், 3 சதவீதம் இடஒதுக்கீடு கிடைக்கும்.
ஜப்பானிலிருந்து வந்த 'கராத்தே' மற்றும் பிற விளையாட்டுகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் சிலம்பத்துக்கு கொடுத்தும் பாரம்பரியத்தையும் தற்காப்பையும் வளர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இன்று (நவ. 22ம் தேதி) உலக சிலம்ப தினம்:

