/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பட்டு நெசவு மேம்பாடு கைகொடுக்கும் திட்டம்
/
பட்டு நெசவு மேம்பாடு கைகொடுக்கும் திட்டம்
ADDED : பிப் 18, 2025 11:54 PM
திருப்பூர்; பட்டு நெசவாளர்கள், 'சில்க் சமாக்ரா - 2' திட்டத்தில், அரசு மானியத்துடன் அதிநவீன தொழில்நுட்பத்தை நிறுவி, தொழிலை மேம்படுத்திக்கொள்ளலாம்.
பெங்களூரு மத்திய பட்டுவாரியத்தின் சில்க் சமாக்ரா - 2 திட்டத்தில், பட்டு நெசவு தொழிலுக்கான இயந்திரங்கள், மத்திய, மாநில அரசு மானியத்துடன் மிக குறைந்த விலையில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுவருகிறது.
புதிய தொழில்நுட்பங்களை புகுத்தி, கைத்தறி நெசவு தொழிலை மேம்படுத்துவதோடு, பட்டு உற்பத்தியையும் அதிகரிப்பது, நெசவாளர் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது.
ஐந்தாவது நிதிக்குழுவின், 2021 - 22 முதல் 2025 - 26 வரையிலான காலங்களில் அரசு மானியத்துடன் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. மினியேச்சர் எரி ஸ்பின்னிங் மில், கணினி வழி டெக்ஸ்டைல் டிசைனிங், எலக்ட்ராணிக் ஜாக்கார்ட், மைக்ரோ டைப் டையிங், டப் டையிங், ஜீரோ டிஸ்சார்ஜ் சுத்திகரிப்பு என பல்வேறுவகையான தொழில்நுட்ப மேம்பாட்டு இயந்திரங்கள் வாங்க மானியம் வழங்கப்படுகிறது.
திருப்பூர் மாவட்ட பட்டு நெசவாளர்கள், கலெக்டர் அலுவலக வளாகத்தில், ஐந்தாவது தளத்தில் செயல்படும் கைத்தறித்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்கள் பெறலாம்.

