ADDED : ஜூன் 22, 2025 11:52 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெள்ளகோவில்: மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை சார்பில், புத்தக திருவிழாவை முன்னிட்டு திறன் மேம்பாட்டு போட்டி வெள்ள கோவில் ஆர்.பி.எஸ்., மஹாலில் நடந்தது.
பேச்சு, ஓவிய போட்டியில் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் 800 பேர் பங்கேற்றனர். கவுன்சிலர் கலையரசி, விஜயலட்சுமி ஆகியோர் துவக்கி வைத்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு வெள்ளகோவில் புத்தக திருவிழாவில் இடம் பெற்ற புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது.
மகாத்மா காந்தி அறக்கட்டளை தலைவர் ராஜ்குமார், புத்தகத் திருவிழாவின் ஒருங்கிணைப்பாளர் அருண்குமார், விழா ஒருங்கிணைப்பாளர் ஆதி, சம்பத் ஆகியோர் செய்திருந்தனர்.