/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திறன் படிப்பு திட்ட தேர்வு 331 மாணவர் 'ஆப்சென்ட்'
/
திறன் படிப்பு திட்ட தேர்வு 331 மாணவர் 'ஆப்சென்ட்'
திறன் படிப்பு திட்ட தேர்வு 331 மாணவர் 'ஆப்சென்ட்'
திறன் படிப்பு திட்ட தேர்வு 331 மாணவர் 'ஆப்சென்ட்'
ADDED : ஜன 11, 2026 07:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவருக்கு மத்திய அரசின், தேசிய வருவாய் வழி திறன் படிப்பு திட்டத் தேர்வு (என்.எம்.எம்.எஸ்.,) அரசு தேர்வுகள் இயக்ககத்தால் நடத்தப்படுகிறது.
இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவருக்கு ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
திருப்பூர் கல்வி மாவட்டத்தில், 23 மையங்களில் நேற்று இத்தேர்வு நடந்தது. மாவட்டம் முழுதும், 6,366 பேர் விண்ணப்பித்த நிலையில், நேற்று, 6,035 பேர் தேர்வெழுதினர்; 331 மாணவ, மாணவியர் தேர்வில் பங்கேற்கவில்லை.