/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆக்கிரமிப்பு அகற்ற மெத்தனம்; சாக்கடை கால்வாய் பணி தாமதம்
/
ஆக்கிரமிப்பு அகற்ற மெத்தனம்; சாக்கடை கால்வாய் பணி தாமதம்
ஆக்கிரமிப்பு அகற்ற மெத்தனம்; சாக்கடை கால்வாய் பணி தாமதம்
ஆக்கிரமிப்பு அகற்ற மெத்தனம்; சாக்கடை கால்வாய் பணி தாமதம்
ADDED : ஆக 06, 2025 12:27 AM

அனுப்பர்பாளையம்; திருப்பூர் மாநகராட்சி, 25வது வார்டு, சிறுபூலுவபட்டி, எஸ்.பி., நகர் மெயின் ரோட்டில் மாநகராட்சி சார்பில், 1.80 கோடி ரூபாய் மதிப்பில் சாக்கடை கால்வாய் கட்டும் பணி நடந்து வருகிறது.
அப்பகுதியில் தனியார் ஆக்கிரமிப்பு உள்ளது. அதனை நெடுஞ்சாலை துறையினர் அகற்ற வேண்டும் எனவும், நெடுஞ்சாலை துறையினர் மாநகராட்சி தான் அகற்ற வேண்டும் எனவும் கூறி வந்தனர்.
இந்த 'இழுத்தடிப்பால்', சாக்கடை கால்வாய் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், வீதியில் தேங்கும் கழிவுநீர் ரங்கநாதபுரம் வீதியில் உள்ள வீடுகளுக்குள் செல்கிறது. குடிநீருடன் கழிவு கலந்து வருகிறது.
பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி, வார்டு கவுன்சிலர் தங்கராஜ் தலைமையில், அப்பகுதியினர் நேற்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையறிந்து அப்பகுதிக்கு உடனே வந்த நெடுஞ்சாலை துறையினர் மூன்று நாளில் ஆக்கிரமிப்பை அகற்றுவதாக உறுதி கூறினார். இதனால், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.