ADDED : ஜன 06, 2024 11:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்;அனுப்பட்டியில், தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ், ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.
வட்டார வேளாண் உதவி இயக்குனர் அகிலா தலைமை வகித்தார். வேளாண் உதவியாளர்கள் அஜித், முத்து செல்வன் மற்றும் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திட்ட ஆலோசகர் அரசப்பன் பேசுகையில், ''மாவுச்சத்து, புரதச்சத்து, வைட்டமின்கள், தாது உப்புகள் மற்றும் நார்ச்சத்துக்களை, தானியங்கள் வழங்குகின்றன. உடலின் கொழுப்பு சத்தை குறைத்து, சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி, செரிமானத்தை துரிதப்படுத்துகிறது,'' என்றார்.