/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குறுமைய அளவிலான கேரம் சிலம்பப்போட்டிகள் துவக்கம்
/
குறுமைய அளவிலான கேரம் சிலம்பப்போட்டிகள் துவக்கம்
ADDED : ஜூலை 31, 2025 09:48 PM

உடுமலை; உடுமலை குறுமைய அளவிலான கேரம் மற்றும் சிலம்பம் போட்டி நேற்று துவங்கியது.
உடுமலை குறுமைய அளவிலான போட்டிகளை சோமவாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நடத்துகிறது. நேற்று, 14, 17 மற்றும் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான கேரம் மற்றும் சிலம்பம் போட்டி துவங்கியது.
போட்டிகள் சோமவாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்தது. சிலம்பம் போட்டிக்கு 293 மாணவர்களும், கேரம் போட்டிக்கு 241 மாணவர்களும் பங்கேற்றனர்.
போட்டிகளை மாவட்ட கல்வி அலுவலர்(தொடக்கப்பள்ளி) அருள்ஜோதி, வட்டார கல்வி அலுவலர் ரோஜாவானரசி, உடுமலை வட்டார கல்வி அலுவலர் பிருந்தா, டாக்டர் வருண்பாரதி, பள்ளி தலைமையாசிரியர் ஆலீஸ்திலகவதி போட்டிகளை துவக்கி வைத்தனர்.
துவக்க விழாவில் பி.டி.ஒ.,க்கள் சுப்ரமணியம், பரத்கண்ணன் முன்னிலை வகித்தனர்.