/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'நெட்வொர்க்' பிரச்னையால் தடைபடும் ஸ்மார்ட் வகுப்புகள்
/
'நெட்வொர்க்' பிரச்னையால் தடைபடும் ஸ்மார்ட் வகுப்புகள்
'நெட்வொர்க்' பிரச்னையால் தடைபடும் ஸ்மார்ட் வகுப்புகள்
'நெட்வொர்க்' பிரச்னையால் தடைபடும் ஸ்மார்ட் வகுப்புகள்
ADDED : ஜூலை 04, 2025 10:15 PM
உடுமலை; அரசுப்பள்ளிகளில் இணைய சேவை தடைபடுவதால், ஸ்மார்ட் வகுப்புகள் செயல்படாமல் உள்ளது.
அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள், உயர்தர ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளது. உடுமலை சுற்றுப்பகுதியில் அதற்கான இணைய சேவைகளும் பள்ளிகளில் வழங்கப்பட்டுள்ளன.
ஜூலை இறுதிக்குள் அனைத்து பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்புகள், ஆய்வகங்களை செயல்பாட்டுக்கு கொண்டுவர, பள்ளிகளை தயாராக இருப்பதற்கு அரசு அறிவித்துள்ளது.
ஆனால், உடுமலை சுற்றுப்பகுதியில் பள்ளிகளில் இணைய சேவை தொடர்ந்து பாதிக்கப்படுகிறது. இதனால் ஸ்மார்ட் வகுப்புகள் செயல்படுத்த முடியாமல் ஆசிரியர்கள் குழம்புகின்றனர்.
பள்ளி தலைமையாசிரியர்கள் கூறியதாவது:
அரசுப்பள்ளிகளில், பி.எஸ்.என்.எல்., சேவை முற்றிலும் தடைபட்டுள்ளது. தடையில்லாத சேவை கிடைப்பதில்லை. இரண்டு நாட்கள் வேலை செய்கிறது. மூன்று நாட்கள் 'நெட்வொர்க்'பிரச்னை ஏற்படுகிறது.
இத்தகைய இணைய சேவையை வைத்து, எவ்வாறு ஸ்மார்ட் வகுப்புகள் நடத்துவது? ஆசிரியர்களின் மொபைல்போன் இணைய வசதி வாயிலாக, சில பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் நடக்கிறது.
ஆனால் அனைத்து பள்ளிகளிலும் இது சாத்தியமில்லை.கடைக்கோடி கிராம பள்ளிகளில் இணைய சேவை தொடர் பிரச்னையாக உள்ளது. இவ்வாறு, தெரிவித்தனர்.