/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாம்புகள் 'சண்டை'... மக்கள் திக்... திக்!
/
பாம்புகள் 'சண்டை'... மக்கள் திக்... திக்!
ADDED : பிப் 18, 2024 01:29 AM

பல்லடம்:பல்லடத்தில் ஒன்றோடொன்று சண்டையிட்டுக் கொண்ட சாரைப்பாம்புகளை தீயணைப்பு படை வீரர்கள் மீட்டு வனப்பகுதியில் விடுவித்தனர்.
பல்லடம், கொசவம்பாளையம் ரோடு, நுாலக கட்டடம் அருகே, மஞ்சள் மற்றும் கருஞ்சாரை பாம்புகள் ஒன்றோடொன்று சண்டையிட்டுக் கொண்டு, அருகில் உள்ள கழிவு நீர் கால்வாய்க்குள் விழுந்தன.
அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள், பாம்புகள் சண்டையிட்டு வருவதை கண்டு, தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதற்குள், மஞ்சள் சாரைப்பாம்பு கருஞ்சாரை பாம்பை விழுங்க முயன்றது.
தீயணைப்பு படை வீரர்கள், உபகரணங்கள் உதவியுடன் பாம்புகளை பிடிக்க முயன்றனர். ஆனால், கால்வாய்க்குள் சண்டையிட்டபடியே பாம்புகள் நீண்ட துாரம் சென்றன.
இறுதியில், மஞ்சள் சாரையிடமிருந்து கருஞ்சாரையை மீட்ட தீயணைப்பு படை வீரர்கள், இரண்டு பாம்புகளையும் லாவகமாக பிடித்து சென்று காட்டுப் பகுதிக்குள் விட்டனர். பாம்புகள் சண்டையிட்டதைப் மக்கள் 'திக்... திக்' மனநிலையுடன் பார்த்தனர்.
அன்றே சொன்ன 'தினமலர்'
பாம்புகள் பிடிபட்ட இடத்தின் அருகில்தான் சார் கருவூல அலுவலகம் நுாலகம் ஆகியவை உள்ளன. சார் கருவூல அலுவலகத்தில் சாரைப்பாம்புகள் நடமாட்டம் உள்ளதாக, சமீபத்தில, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. இப்பகுதி, சுகாதாரம் இன்றி முப்புதர்கள் மண்டி கிடப்பதால், பாம்புகளின் புகலிடமாக உள்ளது. முட்புர்களை அகற்றி பாம்புகளால் ஏற்படும் அச்சத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.