/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பொன்முடி மீது சட்ட நடவடிக்கை சமூக ஆர்வலர் கூட்டமைப்பு புகார்
/
பொன்முடி மீது சட்ட நடவடிக்கை சமூக ஆர்வலர் கூட்டமைப்பு புகார்
பொன்முடி மீது சட்ட நடவடிக்கை சமூக ஆர்வலர் கூட்டமைப்பு புகார்
பொன்முடி மீது சட்ட நடவடிக்கை சமூக ஆர்வலர் கூட்டமைப்பு புகார்
ADDED : ஏப் 12, 2025 11:21 PM
பல்லடம்: ஹிந்து மதத்தையும், பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் பேசிய அமைச்சர் பொன்முடி மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பல்லடம் சமூக ஆர்வலர் கூட்டமைப்பினர் போலீசில் புகார் மனு அளித்தனர்.
இதன் தலைவர் அண் ணாதுரை கூறியதாவது:
பொன்முடியின் பேச்சு மன வேதனையை ஏற்படுத்தி உள்ளது. ஹிந்து மதத்தினரை புண்படுத்தும் விதமாக, பொறுப்பில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் இதுபோன்ற அநாகரிகமான செயல்களில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி, ஜாதி மத அரசியல் வேறுபாடுகள் இன்றி செயல்படுவேன் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டு பதவியேற்ற ஒரு அமைச்சர், மத நம்பிக்கைகள், ஒற்றுமைக்கு எதிராகவும்; பெண்களை இழிவுபடுத்தி, கேவலப்படுத்தியும், ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தியும் பேசியது, இந்திய இறையாண்மைக்கு எதிரானது.
எனவே, அமைச்சர் பொன்முடி மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.