ADDED : அக் 29, 2026 10:45 PM
அ நிறம் | அளவு
உடுமலை: உடுக்கம்பாளையம் சுற்றுப்பகுதி விவசாயிகள், மண் பரிசோதனை செய்து கொள்ள சிறப்பு முகாம், இன்று கிராம விநாயகர் கோவில் அருகே நடக்கிறது.
உடுமலை வட்டார வேளாண்துறையினர் அறிக்கை: உடுக்கம்பாளையம் சுற்றுப்பகுதி விவசாயிகள், தங்கள் மண் மற்றும் நீர் மாதிரிகளை பரிசோதித்து முடிவுகளை உடனடியாக தெரிந்து கொள்ள சிறப்பு முகாம், இன்று அக்கிராம விநாயகர் கோவில் அருகே காலை, 10:30 மணி முதல் நடைபெற உள்ளது.
பல்லடம் மண் பரிசோதனை நிலையத்தில் இருந்து, நடமாடும் மண் பரிசோதனை வாகனம் கொண்டு வரப்பட்டு, இந்த முகாம் நடைபெற உள்ளது. மண், நீர் மாதிரி ஒன்றுக்கு தலா ரூ. 30 மட்டும் கட்டணமாக வசூலிக்கப்படும்.
இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
