UPDATED : அக் 15, 2026 12:00 AM
ADDED : அக் 14, 2026 05:36 PM
அ நிறம் | அளவு
திருப்பூர்: ஊத்துக்குளி கோட்ட மின்வாரியம் சார்பில், சூரியசக்தி மின் திட்ட விழிப்புணர்வு முகாம், பெருமாநல்லுார் ஸ்ரீலட்சுமி மஹாலில் நாளை (16-ம் தேதி) நடக்கிறது.
ஊத்துக்குளி கோட்ட செயற்பொறியாளர் விஜய ஈஸ்வரன் அறிக்கை:
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழக அதிகாரிகள், பதிவு பெற்ற சூரியசக்தி மின் நிறுவனம் மற்றும் வங்கி அலுவலர்கள் பங்கேற்கும் இம்முகாம், பெருமாநல்லுார், கணக்கம்பாளையம் சாலையில் உள்ள பாலசமுத்திரம் ஸ்ரீலட்சுமி மஹாலில் காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை நடைபெறும். மத்திய, மாநில அரசுகளின் மானியத்தில் சூரியசக்தி மின் தகடுகள் பொருத்துவது, வங்கிக் கடன் பெறுவது குறித்து முகாமில் விளக்கம் பெறலாம். இத்திட்டத்தில் பயன்பெற www.pmsuryaghar.gov.in என்ற இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம்.
