ADDED : ஏப் 29, 2025 07:05 AM

பல்லடம்:
பல்லடம் இமைகள் ரோட்டரி சங்கம் சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா  நடந்தது.
பட்டய தலைவர் சுந்தர்ராஜன் தலைமை வகித்தார். திருப்பூர் மேற்கு ரோட்டரி சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். பட்டய செயலாளர் நாராயணசாமி வரவேற்றார்.
ரோட்டரி மாவட்ட ஆளுநர் சுரேஷ் பாபு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.  முன்னதாக, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவில் அடிவாரத்தில், 40 ஆயிரம் ரூபாய் மதிப்பில் சோலார் மின்விளக்கு அமைக்க நிதி உதவி வழங்கப்பட்டது.
கோடங்கிபாளையத்தைச் சேர்ந்த, 101 மாணவர்களுக்கு எழுது பொருட்கள், காது குறைபாடு உள்ள பயனாளி ஒருவருக்கு, 10 ஆயிரம் ரூபாய் நிதி உதவி ஆகியவை வழங்கப்பட்டன. ரோட்டரி முன்னாள் கவர்னர் சண்முகசுந்தரம், மேற்கு ரோட்டரி செயலாளர் கார்த்தி, பொருளாளர் சிவகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

