/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநகராட்சியில் எதிரொலித்த திடக்கழிவு மேலாண்மை; ஆக்கபூர்வமான திட்டம் வகுத்து செயல்படுத்த வேண்டும்
/
மாநகராட்சியில் எதிரொலித்த திடக்கழிவு மேலாண்மை; ஆக்கபூர்வமான திட்டம் வகுத்து செயல்படுத்த வேண்டும்
மாநகராட்சியில் எதிரொலித்த திடக்கழிவு மேலாண்மை; ஆக்கபூர்வமான திட்டம் வகுத்து செயல்படுத்த வேண்டும்
மாநகராட்சியில் எதிரொலித்த திடக்கழிவு மேலாண்மை; ஆக்கபூர்வமான திட்டம் வகுத்து செயல்படுத்த வேண்டும்
UPDATED : ஆக 01, 2025 10:51 AM
ADDED : ஜூலை 31, 2025 10:26 PM

திருப்பூர்: 'திடக்கழிவு மேலாண்மையில், மாநகராட்சி உரிய கவனம் செலுத்த வேண்டும். இது தொடர்பாக, ஆய்வுக்கூட்டம் நடத்த வேண்டும்,' என மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
திருப்பூர் மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் நேற்று காலை மாநகராட்சி கூட்டரங்கில் நடைபெற்றது. மேயர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். துணை மேயர் பாலசுப்ரமணியம், கமிஷனர் அமித் மு ன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள், மாநகராட்சி அலுவலர்கள், ஒப்பந்த நிறுவனத்தினர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் விவாதம்:
ரவிச்சந்திரன் இ.கம்யூ.,):
திருப்பூரில் பல ஆண்டுகளாக குப்பை பிரச்னை உள்ளது. உரிய காலத்தில் ஆண்டு தோறும் நிதி ஒதுக்கீடு செய்து பணி செய்திருந்தால் இந்த நெருக்கடி ஏற்பட்டிருக்காது. மக்களம் தொகை பல மடங்கு அதிகரித்துள்ளது. பல விதமான கழிவுகள் சேகரமாகிறது. குப்பை பிரச்னையில் அனைத்து தரப் பும் மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து தீர்வு காண வேண்டும். கிராமப் பகுதியில் தற்போது இதனை அரசியலாக்கி விட்டனர். அவதுாறு மற்றும் தவறான தகவல் பரப்புவோர் மீது புகார் அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேல்நிலை தொட்டி வளாகங்களில் உரிய பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும்.
செந்தில்குமார் (காங்.,):
குப்பை பிரச்னையில் நிர்வாகத்துடன் அனைத்து தரப்பும் இணைந்து துணை நிற்போம். இதில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம். ஆளும் கட்சி நிர்வாகிகள் தான் பொதுமக்களை துாண்டி விட்டும், மாநகராட்சிக்கு எதிராகவும் செயல்படுகின்றனர். கருமத்தம்பட்டியில் இடம் தேர்வு செய்யப்பட்டதாகக் கூறியது என்ன ஆனது. கோவை மாநகராட்சி குப்பைக் கிடங்குக்கு ஏன் இங்கிருந்து குப்பையைக் கொண்டு செல்லக் கூடாது. (இவ்வாறு அவர் பேசிய போது, மேயர் குறுக்கிட, சில நிமிடம் இருவரிடையே சற்று கடும் விவாதம் நடந்தது).
நான்காவது குடிநீர் திட்டத்தில் நான்கு மோட்டார் பழுதாகி, 2 மோட்டார், 2 மாதம் இயங்கவில்லை. இதனால், குடிநீர் அளவு குறைந்து விட்டது. தனியார் கல்வி நிறுவனங்களுக்கு சொத்து வரி வசூலிப்பதில் பெரும் தடங்கல் ஏற்பட்டுள்ளது. இடம் அளவீடு செய்து வரி வசூலிக்க ஆர்வம் காட்டவில்லை. ஐகோர்ட்டில் இது குறித்த வழக்கு தள்ளுபடியாகி ஏழு மாதமாகியும் அடுத்த நடவடிக்கை இல்லை. தற்போது சுப்ரீம் கோர்ட்டை அணுகியுள்ளனர். மாநகராட்சி நிர்வாகம் இது குறித்து கண்டு கொள்ளாமல் உள்ளது. முதல்வர் வருகை என அறிவிக்கப்பட்டதால் நகர ரோடுகள் சீரமைக்கப்பட்டது. டி.எம்.சி., காலனியில் வசிப்போருக்கு பட்டா வழங்க வேண்டும். சொத்து வரி பிரச்னையில் எந்த முன்னேற்றமும் இல்லை.
செல்வராஜ் (இ.கம்யூ.,):
வார்டு பகுதியில் சென்று, குப்பை அகற்ற கோரி போராட்டம் நடத்தும் அமைப்பினரே, பாறைக்குழிக்குச் சென்று அங்கு குப்பையைக் கொட்டக் கூடாது என்று போராடும் நிலை உள்ளது. குழாய் இணைப்புகளில் குறைந்த அழுத்தத்தில் தான் குடிநீர் வருகிறது. ரோடு போடும் பணிக்கு பல நாட்கள் வராத வாகனம், ரோடு தோண்டும் பணிக்கு மட்டும் உடனே வந்து நிற்கிறது. தெரு விளக்கு உபகரணங்கள் தரமாக இல்லை. ஒரு மாதத்தில் ஆறு முறை பழுது நீக்கியும் தெரு விளக்குகள் எரியாமல் உள்ளது.
குணசேகரன் (பா.ஜ.,):
குப்பை அகற்றும் பணிக்கு உரிய ஆட்கள் இல்லை; வாகனங்களும் இல்லை. பேட்டரி சார்ஜ் நிற்பதில்லை; டீசல் வாகனங்களுக்கு உரிய டீசல் வழங்குவதில்லை. வாகனங்களைத் தள்ளிக் கொண்டு சென்று குப்பை சேகரிக்கின்றனர். மண்ணை எடுத்து போட்டுக் கொண்டு வாகனங்களில் குப்பை என எடையைக் காட்டி முறைகேடு செய்கின்றனர். நான்காண்டாகியும் குப்பை பிரச்னைக்கு தீர்வு காணமுடியவில்லை. கோடி கோடியாக பணம் கொடுத்தும் தனியார் நிறுவனம் முறையாக பணியாற்றாமல் உள்ளது. பில் தொகையை நிறுத்தி வைத்தால் மட்டுமே சரிப்படும். குப்பைகள் தேக்கத்தால் தெரு நாய் தொல்லை, தீ வைப்பதால் புகை பரவி தொல்லை என பிரச்னை அதிகரித்து வருகிறது.
இரங்கல் தீர்மானம்
அண்மையில் காலமான திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., குணசேகரன் (அ.தி.மு.க.,) மறைவுக்கு மாநகராட்சியில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மறைந்த குணசேகரன் ஒரு முறை கவுன்சிலராகவும், ஒரு முறை துணை மேயராகவும் பதவி வகித்தவர். தீர்மானம் மீது அனைத்து கட்சி கவுன்சிலர் குழு தலைவர்கள் பேசினர்.
'பல்க் வேஸ்ட்' வெளியேற்றும் நிறுவனங்கள் மீதான நிலை குறித்து விளக்க வேண்டும். ஓட்டல்களில் சேகரிக்கப்படும் கழிவுகளுக்கு தனியார் நிறுவனம் கட்டணம் வசூலிக்கிறது. அதே சமயம் அந்த கழிவுகளை மாநகராட்சி கழிவாக கணக்கில் சேர்த்துக் கொள்கிறது
திருப்பூர் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்துவதில் நிலவும் சிக்கல் மற்றும் முறையான நடைமுறை பின்பற்றாமல் உள்ளது ஆகியன குறித்தும் 'தினமலர்' நாளிதழில் சுட்டிக் காட்டி செய்தி வெளியானது. நேற்று நடந்த மாநகராட்சி கூட்டத்தில் பேசிய மேயர் தினேஷ்குமார், 'தினமலர்' நாளிதழுக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்கிறேன். மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் வாயிலாக 'தினமலர்' நாளிதழ் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்று தெரிவித்தார்.
காங்., கவுன்சிலர் செந்தில்குமார் பேசுகையில், 'தினமலர் நாளிதழ் மீது நடவடிக்கை எடுப்பேன் என்ற கருத்தை மேயர் வாபஸ் பெற வேண்டும்' என்றார். அதற்கு மேயர் மறுப்பு தெரிவித்த போது, இருவரிடையே ஓரிரு நிமிடம் கடும் வாக்குவாதம் நடந்தது.
அப்போது குறுக்கிட்ட கவுன்சிலர் ரவிச்சந்திரன் (இ.கம்யூ.,), 'பத்திரிகைகளும் நம்முடன் இணைந்து தீர்வு காண ஒத்துழைக்க வேண்டும். அதனை வலியுறுத்த வேண்டும்,' என்றார்.
திடக்கழிவு மேலாண்மை குறித்து நான்காண்டாக பேசி வருகிறோம். குப்பை தரம் பிரித்து வாங்கும் திட்டத்துக்கு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும். பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் பயிற்சியும் தர வேண்டும். மறு சுழற்சி முறையில் தோல்வியடைந்த திட்டங்களை தவிர்த்து புதிய நடைமுறை கொண்டு வர வேண்டும். ரிசர்வ் சைட்கள் மீட்டு உரிய வகையில் பயன்படுத்த வேண்டும்.
இடுவாய் பகுதியிலுள்ள மாநகராட்சி நிலத்தின் நிலை என்ன என தெரிய வேண்டும். 'பல்க் வேஸ்ட்' வெளியேற்றும் நிறுவனங்கள் மீதான நிலை குறித்து விளக்க வேண்டும். ஓட்டல்களில் சேகரிக்கப்படும் கழிவுகளுக்கு தனியார் நிறுவனம் கட்டணம் வசூலிக்கிறது. அதே சமயம் அந்த கழிவுகளை மாநகராட்சி கழிவாக கணக்கில் சேர்த்துக் கொள்கிறது. இந்த நிறுவனத்துடன் சிறப்பு கூட்டம் நடத்தி உரிய தீர்வு காண வேண்டும். பணிகள் செய்யும் நிறுவனங்கள், பில்கள் நிலுவை என்று கூறி பணிகளை செய்யாமல் உள்ளனர்.
லட்சக்கணக்கில் வரி நிலுவை உள்ள இடங்களில் கண்டு கொள்ளாத ஊழியர்கள் சில ஆயிரம் நிலுவை வைத்துள்ளவர்களின் குரல்வளையை நெரிப்பது எந்த விதத்தில் நியாயம்? எனவே, இது விஷயத்தில் கடும் நடவடிக்கை எடுப்பது தவிர்க்க வேண்டும். சொத்து வரி விவகாரத்தில் அரசுக்கு தீர்மானம் அனுப்பி, மாதக்கணக்காகியும் எந்த அறிவிப்பும் இல்லை. ஒப்பந்த நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இ.எஸ்.ஐ., மற்றும் பி.எப்., பிடித்தம், காப்பீடு ஆகியன வழங்க வேண்டும். இதனை நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும். கண்காணிப்பு கேமரா அமைக்க பட்ஜெட்டில் வெளியிட்ட அறிவிப்பு செயல்படுத்தாமல் உள்ளது. நகரப் பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்ற சிறப்பு குழு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு ஆக்கப்பூர்வமான திட்டங்களை வகுத்து அதனை செயல்படுத்த வேண்டும்.
- அன்பகம் திருப்பதி,
மாநகராட்சி எதிர்க்கட்சி குழு தலைவர்

