ADDED : செப் 25, 2024 12:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி : அவிநாசி அருகே அம்மாபாளையம் நடுநிலைப்பள்ளியில், பள்ளி மேலாண்மைக்குழுமற்றும் தி ஐ பவுண்டேசன் ஆகியன இணைந்து நடத்திய கண் சிகிச்சை முகாம் நடந்தது.
பள்ளி தலைமையாசிரியர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். எஸ்.எம்.சி. தலைவர் ஈஸ்வரி வரவேற்றார்.
நகராட்சி தலைவர் குமார் குத்துவிளக்கேற்றி, முகாமை துவக்கி வைத்தார்.
பள்ளி மாணவர்கள், 406 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 21 பேருக்கு கண் கண்ணாடி அணிய பரிந்துரைக்கப்பட்டது.