sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சில வரி செய்திகள்...

/

சில வரி செய்திகள்...

சில வரி செய்திகள்...

சில வரி செய்திகள்...


ADDED : நவ 14, 2024 11:38 PM

Google News

ADDED : நவ 14, 2024 11:38 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

191வது ரத்த தான முகாம்


திருப்பூர் முயற்சி மக்கள் அமைப்பு சார்பில், ஆயிரத்து, 191வது மாதாந்திர தொடர் ரத்ததான முகாம் காந்தி நகர் லயன்ஸ் கிளப் வளாகத்தில் நடைபெற்றது. முகாமினை அமைப்பின் தலைவர் சிதம்பரம் துவக்கி வைத்தார். தாராபுரம் அரசு மருத்துவமனை மருத்துவர் சக்திராஜன், தலைமையில் மருத்துவ குழுவினர், 17 யூனிட் ரத்தம் சேகரித்தனர். ரத்ததானம் செய்த அனைத்து கொடையாளர்களுக்கு திருப்பூர் சிவா மருத்துவமனை சேர்மன் துஷ்யந்த், சான்றிதழ் மற்றும் விபத்து காப்பீடு பாலிசி வழங்கி பாராட்டினார். முகாம் ஏற்பாடுகளை அமைப்பின் துணை தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் விஜயராஜ் மற்றும் நிர்வாகிகள் கணேசன், ராஜூ ஆகியோர் செய்து இருந்தனர்.

---

ஊராட்சி ஒன்றிய அலுவலகம் திறப்பு


பொங்கலுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு, 3.42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. அதற்கான திறப்பு விழா நடந்தது. அக்கட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், கலெக்டர் கிறிஸ்துராஜ், எம்.எல்.ஏ., செல்வராஜ், ஒன்றிய குழு தலைவர் குமார், துணைத்தலைவி அபிராமி அசோகன், பி.டி.ஓ., விஜயகுமார் ஊராட்சித் தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். புதிய அலுவலகம் பயன்பாட்டுக்கு வந்துள்ளதால், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், பணியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

---

குப்பையால் மாசுபடும் நீர்நிலை


பல்லடம் ஒன்றியம், கரைப்புதுார் ஊராட்சி, பாச்சாங்காட்டுப்பாளையம் கிராமத்தில், துப்புரவு பணி சரிவர மேற்கொள்ளப்படாததால், சுகாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது. இங்குள்ள, நீர் நிலையில் குப்பைகள் குவிந்து, நீரோடை மாசடைந்து வருகிறது. அப்பகுதியினர் கூறுகையில், 'துப்புரவு பணி செய்ய ஊராட்சி பணியாளர்கள் யாரும் வருவதில்லை. வீதிகள் முழுவதும் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. சாக்கடை கால்வாய்கள், குப்பைகள் நிரம்பி அடைத்து கிடப்பதால், கொசுப்புழுக்கள் அதிகளவு உற்பத்தி ஆகின்றன. இதனால், மக்களுக்கு தொற்று நோய் அபாயம் ஏற்பட்டுள்ளது,' என்றனர்.

---

சட்ட விழிப்புணர்வு முகாம்


அவிநாசி அருகே பழங்கரை ஊராட்சி, தேவம்பாளையத்தில் 'ரீடு' நிறுவன சமூக அமைப்பின் சார்பில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் நயினான் வரவேற்றார். நிறுவன இயக்குனர் கருப்புசாமி, வக்கீல் பகவத்குமார் ஆகியோர் வட மாநிலத் தொழிலாளர்கள், தமிழகம் வந்தவுடன் அரசிடம் முறையாக பதிவு செய்ய வேண்டும். சரியான ஆவணங்கள் கொடுத்து வேலைக்கு சேர வேண்டும். இ.எஸ்.ஐ., - பி.எப்., பெறுவதற்கான வழிமுறைகள், தொழிலாளர் நலச் சட்டங்கள் பற்றியும் உரிமைகளை பற்றியும் விளக்கினர். 'ரீடு' ஒருங்கிணைப்பாளர் பட்டம்மாள், ரேணுகா பேசினர்.

---

நா.த.க., நிர்வாகிகள் தேர்வு


திருப்பூர் மாவட்ட நாம் தமிழர் பின்னலாடை மற்றும் நுாற்பாலை தொழிலாளர் சங்கம் துவங்கப்பட்டுள்ளது. அதன், பேரவை பொறுப்பாளர்களை, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நியமித்துள்ளார். தொழிற்சங்க பேரவை தலைவராக ஐயப்பன், துணை தலைவர்களாக ரஞ்சித்குமார், சீனிவாசன், செயலாளராக சபேசன், இணை செயலாளர்களாக காஜா உசேன், வடிவேல், துணை செயலாளராக ஷப்னா சுல்தானா, பொருளாளராக ஐயப்பன், செய்தி தொடர்பாளராக முருகேசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, நாம் தமிழர் தொழிற்சங்க மாநில இணை செயலாளர் சுரேஷ் பாபு தெரிவித்தார்.

---

மாணவருக்கு உதவி தொகை


தேசிய அளவில், 'பாரா' நீச்சல் போட்டியில் மூன்று பிரிவுகளில் முதலிடம் பிடித்து மூன்று தங்கப் பதக்கம் வென்ற அவிநாசிலிங்கம்பாளையம் நடுநிலைப்பள்ளியின் மாற்றுத்திறனாளி மாணவர் சபரி ஆனந்துக்கு பள்ளியின் சார்பாக பரிசு வழங்கப்பட்டது. தலைமையாசிரியர், ஆசிரியர்கள், ஊராட்சி தலைவர் கோமதி, உறுப்பினர் சண்முகம், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் கோபால் ஆகியோர் நிதி உதவியை வழங்கினர். வளர்ச்சி குழு உறுப்பினர்கள் பொன்னுசாமி, சரண்யா, மேலாண்மை குழு உறுப்பினர் மேகலா, சிறப்பு ஆசிரியர் லீமா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

---

குப்பை கொட்டுவதால் அவதி


பொங்கலுார் ஒன்றியம், தெற்கு அவிநாசி பாளையம் ஊராட்சியும், குண்டடம் ஒன்றியம் எல்லப்பாளையம் புதுார் ஊராட்சியும் எல்லைகளை பகிர்ந்து கொள்கின்றன. தெற்கு அவிநாசிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கொடுவாய் நாளுக்கு நாள் விரிவடைந்து கொண்டே செல்கிறது. இதனால், கொடுவாய் பகுதியில் குப்பை அதிகம் சேகரமாகிறது. அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், நீர் நிலை புறம்போக்கில் குப்பைகளை கொட்டுகின்றனர். அது எல்லப்பாளையம் புதுார் ஊராட்சிக்கு சொந்தமான இடம். இதனால், அந்த ஊராட்சிக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குப்பை கொட்டுவோருக்கு, 5 ஆயிரம் ரூபாய் அபராதம் என்றும் அறிவிக்கப்பட்டும் கூட, யாரும் கண்டுகொள்ளவில்லை.






      Dinamalar
      Follow us