sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சில வரி செய்திகள்

/

சில வரி செய்திகள்

சில வரி செய்திகள்

சில வரி செய்திகள்


ADDED : ஜூன் 24, 2025 11:45 PM

Google News

ADDED : ஜூன் 24, 2025 11:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊரக வளர்ச்சி அதிகாரி மாற்றம்


தமிழகம் முழுவதும் ஊரக வளர்ச்சி துறையில், உதவி இயக்குனர் நிலை அலுவலர்கள் 39 பேர், பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். அவ்வகையில், திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் மகேஸ்வரன் (ஊராட்சிகள்), உதவி திட்ட அலுவலராக (உள்கட்டமைப்பு - 1) மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதில், கோவையில் பணிபுரியும் அசோகன், திருப்பூருக்கு உதவி இயக்குனராக (ஊராட்சிகள்) நியமிக்கப்பட்டுள்ளார். புதிதாக பொறுப்பேற்றுள்ள அதிகாரிக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

அறங்காவலர் குழு பொறுப்பேற்பு


திருப்பூர் அருகேயுள்ள கொடுவாய் விண்ணளந்த பெரிய பெருமாள் கோவிலில், புதிய அறங்காவலர் குழு பொறுப்பேற்றது. விண்ணளந்த பெரியபெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவராக பாலசுப்பிரமணியம், அறங்காவலராக தனலட்சுமி மற்றும் வீரன் ஆகியோர் பொறுப்பேற்றனர். கோவில் தக்கார் வளர்மதி, ஆய்வாளர் மகேந்திரன் முன்னிலையில், பொறுப்பேற்றனர். புதிதாக பொறுப்பேற்ற அறங்காவலர்களுக்கு கோவில் பட்டாச்சார்யார்கள், பக்தர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

போதை பொருள் தடை செய்யணும்!


அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 15 வேலம்பாளையம் நகர 6வது மாநாடு நடைபெற்றது. நகர தலைவர் அழகு தலைமை வகித்தார். லட்சுமி முன்னிலை வகித்தார். நகர துணை செயலாளர் செல்வி, வரவேற்றார். மாவட்ட துணை தலைவர் சாவித்திரி துவக்கி வைத்தார். தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியை சேர்ந்த ஜெயலட்சுமி, டாக்டர் பவித்ரா வாழ்த்துரை வழங்கினர். இளைஞர்களை சீரழிக்கும் போதை பொருட்களை முற்றாக தடை செய்ய வேண்டும். ரேஷன் கடையில் வழங்கப்படும் உணவு தானியங்களை தரமானதாக சரியான அளவுகளில் பாக்கெட்டுகளில் அடைத்து விநியோகம் செய்ய வேண்டும். என்பது உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்


பல்லடம் மின்வாரிய செயற்பொறியாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், 'சோலார் மின்சாரம் மூலம் மாசுபாட்டு அளவை குறைக்கவும், நமது நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லும் நோக்கத்திலும், விவசாயிகள், பகல் நேரங்களில் கிடைக்கக்கூடிய சோலார் மின்சாரத்தை பயன்படுத்த வேண்டும். இயன்றவரை, தங்களது விவசாய நிலங்களில் உள்ள மின் மோட்டார்களை பகல் நேரங்களில் உபயோகிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது,' என்று கூறியுள்ளார்.

ரூ.1.20 கோடிக்கு மாடுகள் ஏலம்


திருப்பூர், கோவில்வழி அடுத்த அமராவதிபாளையம் கால்நடைச் சந்தைக்கான மாடு வரத்து இரண்டாவது வாரமாக உயர்ந்துள்ளது. இந்த வாரம், கன்றுக்குட்டி, ஆயிரம் ரூபாய் விலை குறைந்து, 3,000 - 4,000 ரூபாய், காளை 1500 விலை குறைந்து, 23 ஆயிரம் - 25 ஆயிரம், எருமை ஆயிரம் ரூபாய் விலை உயர்ந்து, 28 ஆயிரம் - 30 ஆயிரம், மாடு, 2 ஆயிரம் ரூபாய் விலை குறைந்து, 26 ஆயிரம் - 31 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது. விலையில் மாறுபாடுகள் இருந்தது. நேற்று, 1.20 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்ததாக சந்தை ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

காங்., ஆலோசனைக் கூட்டம்


திருப்பூர் வடக்கு மாவட்ட காங்., கட்சி சார்பில், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு, தேசிய செயலர் கோபிநாத் பழனியப்பன், தலைமை வகித்தார். இதில், தமிழ்நாடு காங்., கட்சி பொறுப்பாளர் சூரஜ் எக்டே பங்கேற்று, வரும், 2026 தேர்தலை எதிர்கொள்ளும் முறை குறித்து, நிர்வாகிகள், தொண்டர்களுக்கு ஆலோசனை வழங்கினார். நிகழ்ச்சியில், மாநில, மாவட்ட, சார்பு அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

திருப்பூர் வடக்கு மாவட்ட காங்., கட்சி சார்பில், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு, தேசிய செயலர் கோபிநாத் பழனியப்பன், தலைமை வகித்தார். இதில், தமிழ்நாடு காங்., கட்சி பொறுப்பாளர் சூரஜ் எக்டே பங்கேற்று, வரும், 2026 தேர்தலை எதிர்கொள்ளும் முறை குறித்து, நிர்வாகிகள், தொண்டர்களுக்கு ஆலோசனை வழங்கினார். நிகழ்ச்சியில், மாநில, மாவட்ட, சார்பு அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us