sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சில வரி செய்திகள்

/

சில வரி செய்திகள்

சில வரி செய்திகள்

சில வரி செய்திகள்


ADDED : ஜூலை 10, 2025 09:47 AM

Google News

ADDED : ஜூலை 10, 2025 09:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கவுன்சிலர் பதவிக்கு விண்ணப்பம்

தமிழகம் முழுவதும் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளி ஒருவரை நியமன கவுன்சிலராக பதவியில் அமர்த்த அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதையடுத்து இதற்கான அறிவிப்புகளை உள்ளாட்சி அமைப்புகள் வெளியிட்டு, தகுதியான நபர்களிடம் விண்ணப்பங்கள் பெற உத்தரவிடப்பட்டு, அப்பணி நடந்து வருகிறது. அவ்வகையில், திருப்பூர் மாநகராட்சியில், நியமன கவுன்சிலர் பதவிக்கான விண்ணப்பம் பெறப்படுகிறது. மாவட்ட சக் ஷம் அமைப்பின் பொறுப்பாளர் சக்திவேல், விண்ணப்பத்தை மாநகராட்சி கமிஷனர் அமித்திடம் அளித்தார். திருப்பூர் மாநகராட்சியில் இதுதான் முதல் விண்ணப்பம் என்பது குறிப்பிடத்தக்கது.

தொழிலாளி குடும்பத்துக்கு ஓய்வூதியம் (படம்)

கடலுார், திட்டக்குடியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் பெரியசாமி, 50. பல்லடம் அருகே அருள்புரத்தில் உள்ள சாய ஆலை ஒன்றில் பணியாற்றி வந்தார். கடந்த மார்ச் மாதம் பணியின் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவர், இ.எஸ்.ஐ., காப்பீட்டாளராக இருந்ததால், இவரது குடும்பத்தினருக்கு, ஓய்வூதியம் மற்றும் சார்ந்தோர் உதவித்தொகை ஆகியவை கிடைத்துள்ளன. ரவிச்சந்திரன் பெரியசாமியின் மனைவி செல்வி, 45 மற்றும் மகள் ராகவி, 21 ஆகியோருக்கு மாதந்தோறும் ஓய்வூதியமாக, 18,720 ரூபாய் இ.எஸ்.ஐ., வாயிலாக வழங்கப்பட உள்ளது. இதற்கான ஆணை மற்றும் சார்ந்தோர் உதவிப் பயன் தொகை, 66,708 ரூபாய்க்கான காசோலை ஆகியவற்றை, இ.எஸ்.ஐ., கோவை மண்டல துணை இயக்குனர் இசக்கி சிவா வழங்கினார். இ.எஸ்.ஐ., கிளை மேலாளர் ராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.

விதி மீறியவர்கள் மீது 1,523 வழக்கு

காங்கயத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசார் நகரின் முக்கிய ரோடுகள் மற்றும் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த பகுதிகளில் கண்காணித்து வருகின்றனர். மேலும், போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் வசூலிக்கப்படுகிறது. அவ்வகையில், கடந்த மாதம் காங்கயம் நகரில் நடத்திய வாகன சோதனையில் மது போதையிலும், தலைக்கவசம் அணியாமலும், ஓட்டுநர் உரிமம் இல்லாமலும், சீருடை அணியாமல், மொபைல் போன் பேசியபடியும் வாகனம் ஓட்டியது. அதிவேகமாக வாகனம் ஓட்டியது உட்பட, பல்வேறு விதிகளை மீறிய வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவ்வகையில் மொத்தம் 1,523 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதில், 1.20 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது, என போக்குவரத்து இன்ஸ்பெக்டர் லயோலா இன்னாசி மேரி தெரிவித்தார்.

தமுன்னாள் படைவீரர் குறைகேட்பு

திருப்பூர் மாவட்ட அளவிலான, முன்னாள் படைவீரர் குறைகேட்பு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களை சார்ந்தவர்கள், தங்களது குறைபாடுகளை தெரிவித்தனர். மொத்தம், 150 பேர் பங்கேற்றனர். ஓய்வூதியம், பெயர் மாற்றம், பிறந்த தேதி திருத்தம் என, 65 பேருக்கு திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. மேலும், 13 முன்னாள் படைவீரர்களுக்கு, கலெக்டர் மனிஷ் நாரணவரே, ஓய்வூதிய ஒப்பளிப்பு உத்தரவை வழங்கினார்.

திருச்சியில் நடந்த 'ஸ்பர்ஸ்' ஓய்வூதிய குறைகேட்பு முகாமில், தமிழகம் முழுவதும் சென்று வரும் வகையில், ஓய்வூதிய குறைகேட்பு வாகனம் துவக்கி வைக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, அவ்வாகனம் திருப்பூர் வந்திருந்தது. அதனை கலெக்டர் பார்வையிட்டார். முன்னாள் படைவீரர்கள் நல உதவி இயக்குனர் புஷ்பலதா பாதுகாப்பு கணக்குகள் துணை கட்டுப்பாட்டாளர் சங்கீதா, 'கர்னல்' ராமகிருஷ்ணன் பங்கேற்றனர்.

திருப்பூர் மாவட்ட அளவிலான, முன்னாள் படைவீரர் குறைகேட்பு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களை சார்ந்தவர்கள், தங்களது குறைபாடுகளை தெரிவித்தனர். மொத்தம், 150 பேர் பங்கேற்றனர். ஓய்வூதியம், பெயர் மாற்றம், பிறந்த தேதி திருத்தம் என, 65 பேருக்கு திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. மேலும், 13 முன்னாள் படைவீரர்களுக்கு, கலெக்டர் மனிஷ் நாரணவரே, ஓய்வூதியஒப்பளிப்பு உத்தரவை வழங்கினார்.

திருச்சியில் நடந்த 'ஸ்பர்ஸ்' ஓய்வூதிய குறைகேட்பு முகாமில், தமிழகம் முழுவதும் சென்று வரும் வகையில், ஓய்வூதிய குறைகேட்பு வாகனம் துவக்கி வைக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, அவ்வாகனம் திருப்பூர் வந்திருந்தது. அதனை கலெக்டர் பார்வையிட்டார். முன்னாள் படைவீரர்கள் நல உதவி இயக்குனர் புஷ்பலதா பாதுகாப்பு கணக்குகள் துணை கட்டுப்பாட்டாளர் சங்கீதா, 'கர்னல்' ராமகிருஷ்ணன் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us