ADDED : ஜூலை 25, 2025 11:22 PM

பல்லடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட இச்சிபட்டி கிராமத்தில் நேற்று 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடந்தது. பல்வேறு அரசுத்துறை அதிகாரிகளும் முகாமில் பங்கேற்று பொதுமக்களிடம் விண்ணப்பங்களை பெற்றனர். முன்னதாக, தனியார் திருமண மண்டபத்தில் இந்த முகாம் நடத்தப்பட்ட நிலையில், மண்டபத்தை ஒட்டி, நெடுஞ்சாலை முழுவதும் தி.மு.க., கட்சிக் கொடிகள் அணிவகுத்து வைக்கப்பட்டிருந்தன.
எனவே, இது, உங்களுடன் ஸ்டாலின் முகாமா அல்லது உங்களுடன் தி.மு.க., முகாமா என்ற கேள்வி எழுந்தது. பல்வேறு அரசுத்துறை அதிகாரிகளும் பங்கேற்கும் அரசு சார்ந்த இந்நிகழ்ச்சியில், தி.மு.க., கட்சிக் கொடிகளை வைத்தது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
கழிவு நீர் தேங்கி அவதி
திருப்பூர் - காங்கயம் ரோடு, மாநகராட்சி, 46வது வார்டு, வி.ஜி.வி., கார்டன் பகுதி, 20வது வீதியில் இரு பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் தற்போது முழுமையாக அடைத்து கழிவு நீர் தேங்கி நிற்கிறதது. இதனால் கொசு உற்பத்தி அதிகரித்து பெரும் அவதி நிலவுகிறது. கழிவு நீரிலிருந்து கடும் துர்நாற்றமும் வீசுகிறது. பல இடங்களில், முட்புதர்கள், செடிகள் வளர்ந்து கடுமையான புதர்கள் மண்டிக் கிடக்கிறது. இதனால், பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகரித்து மக்கள் அச்சத்துடன் உள்ளனர். எனவே, கால்வாய்களை துார்வாரி சுத்தப்படுத்துவதோடு, சேதமான கட்டுமானத்தை சீரமைத்து, கழிவுநீர் தேங்காமல் முறையாகச் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முகாமில் கட்சிக் கொடி
பல்லடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட இச்சிபட்டி கிராமத்தில் நேற்று 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடந்தது. பல்வேறு அரசுத்துறை அதிகாரிகளும் முகாமில் பங்கேற்று பொதுமக்களிடம் விண்ணப்பங்களை பெற்றனர். முன்னதாக, தனியார் திருமண மண்டபத்தில் இந்த முகாம் நடத்தப்பட்ட நிலையில், மண்டபத்தை ஒட்டி, நெடுஞ்சாலை முழுவதும் தி.மு.க., கட்சிக் கொடிகள் அணிவகுத்து வைக்கப்பட்டிருந்தன. எனவே, இது, உங்களுடன் ஸ்டாலின் முகாமா அல்லது உங்களுடன் தி.மு.க., முகாமா என்ற கேள்வி எழுந்தது. பல்வேறு அரசுத்துறை அதிகாரிகளும் பங்கேற்கும் அரசு சார்ந்த இந்நிகழ்ச்சியில், தி.மு.க., கட்சிக் கொடிகளை வைத்தது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.