/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தாராபுரத்தில் சோகம்; மகன் இறந்த துக்கம் தாங்காமல் தாய் மரணம்
/
தாராபுரத்தில் சோகம்; மகன் இறந்த துக்கம் தாங்காமல் தாய் மரணம்
தாராபுரத்தில் சோகம்; மகன் இறந்த துக்கம் தாங்காமல் தாய் மரணம்
தாராபுரத்தில் சோகம்; மகன் இறந்த துக்கம் தாங்காமல் தாய் மரணம்
ADDED : நவ 03, 2025 04:38 PM

திருப்பூர்: திருப்பூர் அருகே மகன் இறந்த துக்கம் தாங்காமல் தாயும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுபற்றிய விவரம் வருமாறு;
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை சேர்ந்தவர் பெரியசாமி, 53; பேரூராட்சி தூய்மை பணி மேற்பார்வையாளர்.
இவர் இன்று காலை பணிக்கு சென்ற போது திடீரென மயங்கி கீழே விழுந்தார். அவரை தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். வழியிலேயே இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
மகன் மருத்துவமனையில் இருப்பது குறித்து அறிந்து, தாயார் ஆரம்மாள், 70 மருத்துவமனைக்கு சென்றார். அங்கு மகன் இறந்ததை கேட்டு, அதிர்ச்சியடைந்து இறந்தார். இது குறித்து தாராபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.