/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சவுடேஸ்வரி அம்மன் திருக்கல்யாணம்
/
சவுடேஸ்வரி அம்மன் திருக்கல்யாணம்
ADDED : அக் 13, 2024 10:15 PM

உடுமலை : உடுமலை பூமாலை சந்து, ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், நவராத்திரி விழாவையொட்டி, நேற்று அம்மன் திருக்கல்யாணம் நடந்தது.
கோவிலில், நவராத்திரி விழா கடந்த, 3ம் தேதி சக்தி அழைத்து கொலு வைத்தல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. நாள்தோறும் இரவு, 7:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. கடந்த, 12ம் தேதி மாவிளக்கு பூஜை நடந்தது.
தொடர்ந்து, தேவாங்கர் சமூக கல்வி அறக்கட்டளை சார்பில், கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. நேற்று காலை, 9:30 மணிக்கு ராமலிங்கேஸ்வரர், அம்மன் திருக்கல்யாணம் நடந்தது.
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மனை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் அம்மன் திருவீதியுலா நடந்தது.