/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தெற்கு குறுமைய டெனிகாய்ட்: மாணவியர் போட்டாபோட்டி
/
தெற்கு குறுமைய டெனிகாய்ட்: மாணவியர் போட்டாபோட்டி
ADDED : ஜூலை 29, 2025 11:46 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; தெற்கு குறுமைய பெண்களுக்கான டெனிகாய்ட் போட்டி, வித்ய விகாசினி பள்ளி மைதானத்தில் நடந்தது.இதில், 14 வயது ஒற்றையர் பிரிவில், கருப்பகவுண்டன்பாளையம் அரசு பள்ளி அணி, வித்ய விகாசினி பள்ளி அணியை வென்றது.
14 வயது இரட்டையர் பிரிவில், வித்ய விகாசினி பள்ளி அணி, கருப்பக்கவுண்டன்பாளையம் பள்ளி அணியை வென்றது. மேலும், 17, 19 வயது ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில், பிரன்ட் லைன் பள்ளி அணி முதலிடம்; வித்ய விகாசினி பள்ளி அணி, இரண்டாமிடம் பெற்றது.

