/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிட்டுக்குருவி தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
சிட்டுக்குருவி தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : மார் 21, 2024 06:56 AM

திருப்பூர் : திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரி, நாட்டு நலப்பணித் திட்டம் அலகு - -2 சார்பில், உலக சிட்டுக்குருவி தினத்தை முன்னிட்டு,' நான் சிட்டுக்குருவியை நேசிக்கிறேன்' எனும் தலைப்பில், கலந்துரையாடல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
என்.எஸ்.எஸ்., அலகு - 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். பறவை ஆர்வலர்கள் கீதாமணி, முருகவேல் பங்கேற்று,' அனைவரும் தங்களது வீட்டில் தானிய உணவு, தண்ணீரை சிறிய மண் சட்டியில் சிட்டுக்குருவிகளுக்கு வைத்தால் அவை தொடர்ந்து உயிர் வாழும்.
வாழ்விடங்களை உருவாக்கினால், அவற்றை நம்மால் பாதுகாக்க முடியும்,' என்றனர்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக என்.எஸ்.எஸ்., மாணவ செயலர்கள் சுந்தரம், செர்லின், கவியரசு ஆகியோர் மாணவ, மாணவியருக்கு செயற்கை சிட்டுக்குருவி கூண்டுகளை வழங்கினர்.

