sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிஷேக விழா: திருப்பூரில் சிறப்பு ஏற்பாடுகள் தயார்!

/

ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிஷேக விழா: திருப்பூரில் சிறப்பு ஏற்பாடுகள் தயார்!

ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிஷேக விழா: திருப்பூரில் சிறப்பு ஏற்பாடுகள் தயார்!

ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிஷேக விழா: திருப்பூரில் சிறப்பு ஏற்பாடுகள் தயார்!


ADDED : ஜன 22, 2024 12:53 AM

Google News

ADDED : ஜன 22, 2024 12:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, திருப்பூரில் பல இடங்களில் பா.ஜ., வினர், ஹிந்து அமைப்புகள் சார்பில், கோவில்களில் சிறப்பு வழிபாடு நடக்க உள்ளது.

அயோத்தி ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிஷேகம் விழா பிரம்மாண்டமாக இன்று நடக்கிறது. இதையொட்டி, திருப்பூரில் ஹிந்து அமைப்புகள், பா.ஜ., வினர் உள்ளிட்ட பலரும் சிறப்பு வழிபாடு, நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளனர்.

அதன் விவரம் வருமாறு:

ஹிந்து முன்னணி சார்பில், சந்திராபுரம் பிரிவு உள்ளிட்ட, 15 இடங்களில் கும்பாபிஷேக விழாவை நேரலையாக பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்துள்ளனர். காலையில் பஜன், திவ்யப்பிரபந்தம், சிறப்பு பூஜை உள்ளிட்டவை நடக்கிறது.

l திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., சார்பில், மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமையில், 19 மண்டலத்தில் கும்பாபிஷேக விழாவை பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்துள்ளனர்.

l இன்று மதியம், 12:20 முதல், 2:00 மணி வரை புனித அட்சதை சமர்ப்பித்து வழிபட வேண்டும். மாலை, 5:00 முதல், 5:30க்குள் ஒவ்வொரு இல்லங்களிலும், கோவில்களில் அகல் விளக்கேற்றி, ஸ்ரீ ராமர் படத்துக்கு, 108 ராம நாம ஜெபம் சொல்லி கூட்டு பிரார்த்தனை செய்து கொண்டாடி மகிழ திருக்கோவில் திருத்தொண்டர் அறக்கட்டளையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

l சிவசேனா சார்பில், திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள ஸ்ரீ குருவாயூரப்பன் கோவிலில் உள்ள ஸ்ரீ ராமசந்திர மூர்த்திக்கு சிறப்பு அலங்கார ஆராதனை செய்தும், அன்னதானம் வழங்க உள்ளனர்.

l மங்கலம் ஊராட்சி, பா.ஜ., சார்பில், மங்கலம் பெருமாள் கோவில், சின்னப்புத்துார் விநாயகர் கோவில், பெரியபுத்துார் பத்ரகாளியம்மன்கோவில், சுல்தான்பேட்டை மாகாளியம்மன் கோவில், கணபதிமாரியம்மன் கோவில், இந்திரா காலனி பட்டத்தரசியம்மன் கோவில், செல்வகணபதி நகர், மீனாட்சி நகர் விநாயகர் கோவில் மற்றும் நீலியில் பெருமாள் கோவில்களில் மதியம், 12:00 மணிக்கு சிறப்பு பூஜை,அன்னதானம் வழங்க உள்ளனர்.

l அவிநாசி வட்டார பா.ஜ., சார்பில், ஸ்ரீவீர ஆஞ்சநேயர் கோவில் முன், 1,008 அகல் விளக்கேற்றி வழிபாடு, ஸ்ரீராமர் படம் தாங்கிய வாகன ஊர்வலம், பொதுமக்களுக்கு அன்னதானம் ஆகியன நடைபெறுகிறது.






      Dinamalar
      Follow us