/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீசத்ய சாய் பக்தர்கள் சிறப்பு பஜன் நிகழ்ச்சி
/
ஸ்ரீசத்ய சாய் பக்தர்கள் சிறப்பு பஜன் நிகழ்ச்சி
ADDED : செப் 07, 2025 10:52 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் பிறந்த நாள் நுாற்றாண்டு விழா பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது.
அவரது பக்தர்கள், சேவா சமிதி மற்றும் பஜன் மண்டபங்கள் ஆகியவற்றில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து கொண்டாடி வருகின்றனர். திருப்பூர் காந்திநகர் ஸ்ரீசத்ய சாய் சேவா சமிதியில் நேற்று சத்ய சாய் பாபா பிறந்த நாள் நுாற்றாண்டை முன்னிட்டு சிறப்பு பஜன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சாய் பக்தர்கள் நுாறு பாடல்கள் பாடி சாய்பாபாவை வணங்கினர்.
காலை 9:00 மணிக்கு துவங்கிய பஜன் நிகழ்ச்சி பகல் 1:00 மணி வரை நடைபெற்றது. தொடர்ந்து மங்கள ஆரத்தி நடத்தி பிரசாதம் வழங்கப்பட்டது.