/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நாளை இரவு முதல் சிறப்பு பஸ் இயக்கம்
/
நாளை இரவு முதல் சிறப்பு பஸ் இயக்கம்
ADDED : ஜன 16, 2025 05:38 AM
திருப்பூர் : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 10ம் தேதி முதல் சிறப்பு பஸ் இயக்கப்பட்டது. முதல் இரண்டு நாட்கள் கூட்டம் இல்லாத நிலையில், 12 மற்றும், 13 ம் தேதி பஸ்களில் கூட்டம் அதிகரித்தது. குறிப்பாக, பொங்கல் முதல் நாளில், 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் திருப்பூரை விட்டு வெளியேறினர். இந்நிலையில், கடந்த, 14 முதல் இன்று (16 ம் தேதி) வரை சிறப்பு பஸ் இயக்கம் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், பொங்கலுக்கு சொந்த மாவட்டம் சென்றவர்கள் திரும்ப வசதியாக வரும், 17ம் தேதி இரவு முதல், 18 மற்றும், 19ம் தேதி வரை சிறப்பு பஸ்கள் மீண்டும் இயக்கப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை திருப்பூர் மண்டல போக்குவரத்து கழக அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

