/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இன்றும், நாளையும் பழநிக்கு சிறப்பு பஸ்
/
இன்றும், நாளையும் பழநிக்கு சிறப்பு பஸ்
ADDED : ஆக 23, 2024 10:17 PM
திருப்பூர்:பழநியில் ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், இன்றும், நாளையும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடக்கிறது. மாநிலம் முழுதும் பல்வேறு பகுதிகளில் இருந்து இம்மாநாட்டுக்கு பக்தர்கள் செல்வர்.
அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பல்வேறு பகுதியில் இருந்து பழநிக்கு இரு நாட்கள் சிறப்பு பஸ் இயக்கப்பட உள்ளது.
கோவை மற்றும் ஈரோடு கோட்டத்தில் இருந்து, 75 சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவை உக்கடத்தில் இருந்து பொள்ளாச்சி, உடுமலை வழியாகவும்; ஈரோட்டில் இருந்து வெள்ளகோவில், காங்கயம், தாராபுரம் வழியாகவும்; திருப்பூரில் இருந்து கொடுவாய், தாராபுரம் வழியாகவும் பழநிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
பழநிக்கு அருகில் உள்ள, திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் இருந்தும், மதுரை, தேனியில் இருந்தும் பழநிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

